டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லியில் நள்ளிரவில் கெஜ்ரிவால் இல்லத்தை ஜாமியா மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தை நள்ளிரவில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இது இரு சமூகங்களிடையேயான மோதலாகவும் வெடித்தது. இதனால் வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகள் போர்க்களமாக மாறின.

Protestors outside Delhi CM Arvind Kejriwals residence

இந்த வன்முறைகளில் 13 பேர் பலியாகினர். 160 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து டெல்லியின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. டெல்லி வன்முறைகளைக் கட்டுப்படுத்த துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Protestors outside Delhi CM Arvind Kejriwals residence

இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தை நள்ளிரவில் ஜாமியா பல்கலை கழக மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வடகிழக்கு டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

டெல்லி வன்முறைகளில் 13 பேர் பலி- நள்ளிரவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனைடெல்லி வன்முறைகளில் 13 பேர் பலி- நள்ளிரவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை

Protestors outside Delhi CM Arvind Kejriwals residence

மேலும் வடகிழக்கு டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளை அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட வேண்டும்; அமைதியை நிலைநாட்ட கெஜ்ரிவால் மற்றும் எம்.எல்.ஏக்கள் பேரணி நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அத்துடன் டெல்லியில் அமைதியை நிலைநாட்ட அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பொதுமக்களிடம் கெஜ்ரிவால் விளக்கி அமைதியை உருவாக்க வேண்டும் என்றும் அந்த மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

English summary
Alumni Association of Jamia Millia Islamia and Jamia Coordination Committee organise a demonstration outside Chief Minister Arvind Kejriwal's residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X