டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவைக்கு வெளியிலும் உறுப்பினர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.. கனிமொழி வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

டெல்லி: நேற்று மக்களவையில முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேறிய நிலையில், அது தொடர்பாக காரசார விவாதம் நடபெற்றது.

மக்களவையில் நேற்று நடைபெற்ற முத்தலாக் தடை மதோசா மீதான விவாதத்தின் போது, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த பாஜக எம்.பி. ரமா தேவியை பார்ந்து, தனக்கு அவரை மிகவும் பிடிக்கும் எனவும் அதனால் தான் எப்பொழுதும் அவரையே பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் சமாஜ்வாதி எம்.பி. அசம் கான் கூறினார்

Provide additional quota for women.. Kanimozhi assertion in the Lok Sabha

இவ்விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி, அவையில் பெண்கள் அதிக அளவு இடம்பெற வேண்டும். பெண்களுக்கு கூடுதல் ஒதுக்கீடுகளை அளிக்க வேண்டும். பெண்கள் தொடர்ச்சியாக அவமதிப்பிற்குள்ளாகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

அவைக்கு வெளியிலும் உறுப்பினர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார் கனிமொழி. மக்களவையில் பல்வேறு பெண் உறுப்பினர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில் பின்னர் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுப்பினர்கள் அவையை தவறாக வழிநடத்த கூடாது என்றார்

நம்மை நாடு முழுவதும் உள்ள மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். உறுப்பினர்கள் உணர்ச்சிப்பூர்வமாக பல விவகாரங்களை அணுகுகின்றனர். பெண்கள் அவையில் உள்ளதை கவனித்து பேச வேண்டும். கடும் போராட்டங்களுக்கு பிறகு பெண்கள் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளனர்.

அவையிலேயே பெண்கள் பற்றி தவறாக பேசினால் பிறகு வெளியுலகில் பெண்கள் மோசமாக நடத்தப்படுவார்கள், அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படுவார்கள் என கவலை தெரிவித்தார்.

English summary
Muthalak Prevention Bill passed in Lok Sabha yesterday There was a bitter discussion about it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X