டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை, கோவையில் உருவானது உள்பட 19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 51!

Google Oneindia Tamil News

டெல்லி: 19 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் இன்று காலை 10.24 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, பிரேசிலின் அமேசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்தியது.

PSLV C 51 rocket to launch today with 19 satellites

பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில் இன்று 59 ஆவது ராக்கெட்டை இஸ்ரோ செலுத்தியது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 10.24 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

PSLV C 51 rocket to launch today with 19 satellites

இதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது. முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள 19 செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

வேகம் எடுக்கும் மநீம.. பிரச்சாரத்தை துவக்கிய துணை தலைவர் மகேந்திரன்.. விறுவிறுப்பாகும் கோவைவேகம் எடுக்கும் மநீம.. பிரச்சாரத்தை துவக்கிய துணை தலைவர் மகேந்திரன்.. விறுவிறுப்பாகும் கோவை

தொடர்ந்து கவுன்ட்டவுனை முடித்துக் கொண்டு சரியான நேரத்தில் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது என விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். இஸ்ரோ முதல்முதலாக வணிக ரீதியில் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

PSLV C 51 rocket to launch today with 19 satellites

இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்திய அமைப்பின் சதீஷ் தவான் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் பொறியியல் கல்லூரி, கோவை சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கூட்டமைப்பில் உருவான யூனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள், பிரேசிலின் அமோசானியா, அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்கள் என மொத்தம் 19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. பாதுகாப்பு படையினரின் பயன்பாட்டுக்காக சிந்து நேத்ரா செயற்கைக்கோள் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசானியாவின் எடை 637 கிலோவாகும். இதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள். பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டது. இந்த சதீஷ் தவான் சாட் செயற்கைக்கோளில் பிரதமர் மோடியின் படமும் பகவத் கீதை வாசகமும் இடம்பெற்றுள்ளது.

English summary
PSLV C51 launches with 19 satellites from Sathish Dhawan today morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X