டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தனியார் வங்கி பாணியில் அரசு வங்கிகள்.. வருகிறார் தலைமை ரிஸ்க் ஆபீசர்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: பொதுத்துறை வங்கிகளுக்கான சீர்திருத்தங்களை இன்று அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பல்வேறு வங்கிகளை இணைத்து, பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கையை 12ஆக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளார் அவர்.

நீரவ் மோடி மாதிரியில் வங்கிகளில் மோசடி செய்வோரை தடுக்க, வங்கிகள், தலைமை ரிஸ்க் ஆபீசர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்ற உத்தரவும் ்தில் முக்கியமானது.

Public sector Banks to recruit chief risk officers, says Nirmala Sitharaman

நிர்மலா சீதாராமன் அறிவித்த தகவல் பின்வருமாறு:

பொது மேலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு பொதுத்துறை வங்கிகளின் வாரியக் குழு அமைக்கப்பட வேண்டும்

கடன்கள் மற்றும் அதுசார்ந்த விவகாரங்களை கண்காணிக்க சந்தையில் இருந்து தலைமை ரிஸ்க் அதிகாரிகளை நியமிக்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனரா வங்கி உட்பட பல வங்கிகள் இணைப்பு, மொத்தமே இனி 12 பொதுத்துறை வங்கிதான்: நிர்மலா அதிரடிகனரா வங்கி உட்பட பல வங்கிகள் இணைப்பு, மொத்தமே இனி 12 பொதுத்துறை வங்கிதான்: நிர்மலா அதிரடி

அடுத்தடுத்த திட்டங்களுக்கு, தனிப்பட்ட வளர்ச்சித் திட்டத்தை வாரிய குழுக்கள் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைமை ரிஸ்க் ஆபீசர் என்பவர் பல தனியார் வங்கிகளில் உள்ளனர். கடன் பெற்று ஏமாற்றிவிட்டு தப்பியோடுவோரை தடுக்க இந்த அதிகாரிகள் நியமனம் அவசியம். ஆனால், இதுவரை, பொதுத் துறை வங்கிகளில் இப்படியான பதவி இல்லை. இதற்கு காரணம், காலம் காலமாக பின்பற்றப்பட்டுவரும் பணியாளர் தேர்ந்தெடுப்பு நடைமுறையில் இதுவரை மாற்றம் செய்யாமல் இருந்ததுதான். இப்போது நிர்மலா சீதாராமன் அந்த மாற்றத்திற்கு விதை தூவியுள்ளார்.

English summary
Nirmala Sitharaman announced several governance reforms for public sector banks. Some of the reforms include, Board committee of public sector banks to appraise the performances of officers at the level of general manager and above.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X