டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுல் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏக்களுடன் உண்ணாவிரதம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஹத்ராஸ் பலாத்கார சம்பவத்தையும், ராகுல் காந்திக்கு எதிராக உத்தரப்பிரதேச போலீஸ் நடந்து கொண்ட விதத்தையும் கண்டித்துள்ளனர். அதிகாரத்தில் உள்ளவர்கள் இது தங்களுக்கு சொந்தமான நாடு என்று நினைக்கக்கூடாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஹத்ராஸ் பலாத்கார சம்பவம் மற்றும் ராகுல் காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

ஹத்ராஸ் பலாத்கார சம்பவத்தை கண்டித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "ஹத்ராஸ் பலாத்கார சம்பவம் மிகவும் வேதனையானது, பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் உத்தரப்பிரதேச அரசாங்கம் நடந்து கொண்ட விதம் சரியில்லை. நாம் ஜனநாய நாட்டில் வாழ்கிறோம், அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த நாட்டின் உரிமையாளர்கள் அல்ல, அவர்கள் இந்த நாட்டு மக்களின் 'சேவகர்கள்' என்பதை மறந்துவிடக் கூடாது. " என்று கூறியுள்ளார்,

Puducherry CM, Congress MLAs go on hunger strike

ஹத்ராஸ் பலாத்காரத்தால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை டெல்லி போலீசார் நடத்திய விதத்தை சிவசேனா கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் வெளியிட்ட அறிக்கையில் "ராகுல் காந்தி தேசிய அரசியல் தலைவர். எங்களுக்கு காங்கிரசுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அவருடன் காவல்துறையின் நடத்தைக்கு யாராலும் ஆதரவளிக்க முடியாது ... அவரது சட்டை காலரை பிடித்து தரையில் தள்ளிவிட்டிருக்கிறார்கள் என்று கண்டித்துள்ளார்,

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராகுல் காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். பலாத்காரத்தால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரிடம் உத்தரப்பிரதேச போலீஸ் நடந்து கொண்டதை கண்டித்து புதுச்சேரி முதல்வர் வி நாராயணசாமி, காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் , உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றன.. புதுச்சேரியில் உள்ள அண்ணா சிலைக்கு அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த விரதம் இன்று மாலை 5:30 மணி வரை நடக்கிறது.

"எந்தவிதமான அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன்".. காந்தியை மேற்காள் காட்டி ராகுல் காந்தி 'நச்' ட்வீட்

இதனிடையே பிரியங்கா காந்தி, அலகாபாத் உயர்நீதிமன்றம் உ.பி. போலீசாருக்கு சம்மன் அனுப்பியதை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "அலகாபாத் ஐகோர்ட்டிடமிருந்து வலுவான மற்றும் ஊக்கமளிக்கும் உத்தரவு வந்திருக்கிறது,. ஹத்ராஸ் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று முழு தேசமும் ஒன்றுபட்டுள்ளது. ஹத்ராஸ் வழக்கை தானாக முன்வந்து விசாரித்துள்ள அலகாபாத் ஐகோர்ட் , உ.பி. போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி உள்ளது என்று கூறினார்.

திரிணாமுல் எம்.பி.க்களின் பிரதிநிதிகள் குழுவை ஹத்ராஸுக்குள் நுழைவதற்கு உத்தரப்பிரதேச போலீசார் தடைவிதித்தனர். டெல்லியில் இருந்து சுமார் 200 கி.மீ.தூரம் பயணித்து ஹத்ராஸில் உள்ள கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த திரிணாமுல் எம்.பி.க்கள் குழுவை உத்தரப்பிரதேச போலீஸ் தடை விதித்தது.பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆதரவளிக்கவும், ஒற்றுமையை வெளிப்படுத்தவும், இரங்கல் தெரிவிக்கவும் சென்ற திரிணாமுல் எம்பிக்கள்: டெரெக் ஓ பிரையன், டாக்டர் ககோலி கோஷ் தஸ்திதர், பிரதிமா மொண்டல் மற்றும் மம்தா தாக்கூர் (முன்னாள் எம்.பி.), " ஆகியோரை போலீசார் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

English summary
Condemning the Hathras rape and detention of Congress leaders Rahul Gandhi and Priyanka Gandhi, Puducherry CM V Narayanasamy, Congress ministers and MLAs along with one MP are sitting on a hunger strike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X