டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புல்வாமா தாக்குதல்.. தீவிரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான்தான் பாதுகாக்கிறது.. இந்தியா கடும் கண்டனம்!

பாகிஸ்தான் தொடர்ந்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மசூத் அசாருக்கு இடமளித்து வருகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு முழு பொறுப்பு பாகிஸ்தான் மட்டும்தான், பாகிஸ்தான் தொடர்ந்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மசூத் அசாருக்கு இடமளித்து வருகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேட்டி அளித்துள்ளார்.

கடந்த வருடம் பிப்ரவரி 14ம் த்தி காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.

இது தொடர்பாக தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த 13,500 பக்க குற்றப்பத்திரிகை பல உண்மைகளை இது தொடர்பாக வெளிப்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 19 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்கள்.

ஆப்கானிஸ்தானிலும் மூக்கை நுழைத்த சீனா...கம்பளம் விரித்த பாகிஸ்தான்...இந்தியாவுக்கு நெருக்கடி!! ஆப்கானிஸ்தானிலும் மூக்கை நுழைத்த சீனா...கம்பளம் விரித்த பாகிஸ்தான்...இந்தியாவுக்கு நெருக்கடி!!

பாகிஸ்தான் எப்படி

பாகிஸ்தான் எப்படி

இந்த குற்றப்பத்திரிக்கை தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேட்டி அளித்துள்ளார். அதில், புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு முழு பொறுப்பு பாகிஸ்தான் மட்டும்தான்.பாகிஸ்தான் தொடர்ந்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மசூத் அசாருக்கு இடமளித்து வருகிறது. ஒன்றரை வருடமாக புல்வாமா தாக்குதல் குறித்த விசாரணை நடந்து வருகிறது. விசாரணையை தொடர்ந்து தற்போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எங்கே இருக்கிறார்

எங்கே இருக்கிறார்

புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம்தான் உரிமை கோரியது. இந்த அமைப்பும் அதன் தலைவரும் பாகிஸ்தானில்தான் இருக்கிறார்கள். இந்த கொலைவெறி தாக்குதலின் மூளையாக செயல்பட்ட மசூத் அசார் பாகிஸ்தானில்தான் இருக்கிறார். பாகிஸ்தான் அவருக்கு சுதந்திரமான புகலிடம் அளித்து வருகிறது.

ஆதாரம் என்ன

ஆதாரம் என்ன

இது தொடர்பான ஆதாரங்கள் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு உள்ளது . ஆனாலும் பாகிஸ்தான் இதில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து பாகிஸ்தான் இதில் பொறுப்பேற்காமல் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் தனது செயலில் இருந்து தப்பிக்க பார்க்கிறது. நாங்கள் இதில் கண்டிப்பாக தீவிரமாக செயல்படுவோம்.

Recommended Video

    Pulwama Case: NIA files Charge Sheet | OneIndia Tamil
    இதுவரை எடுக்கவில்லை

    இதுவரை எடுக்கவில்லை

    இதில் பாகிஸ்தான் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எங்களின் நோக்கம் இதில் அறிக்கை விடுவது இல்லை. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக மோசமான தீவிரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடியை சட்ட பூர்வமாக கொடுக்க வேண்டும். உலக நாடுகளை பாகிஸ்தான் ஏமாற்ற நினைக்கிறது. ஆனால் உலக நாடுகள் இதில் ஏமாற்றம் அடையாது, என்று ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

    English summary
    Pulwama Attack: Pakisthan denies responsibility, keeps Masood Azhar safely says MEA of India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X