டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது காங்கிரஸ் ஆட்சி இல்லை.. பாஜக ஆட்சி.. தீவிரவாதிகளுக்கு திருப்பி கொடுப்போம்.. அமித் ஷா உறுதி!

இது காங்கிரஸ் ஆட்சி கிடையாது, பாஜக ஆட்சி, இந்த ஆட்சி கண்டிப்பாக தீவிரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேசி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்... 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலி- வீடியோ

    டெல்லி: இது காங்கிரஸ் ஆட்சி கிடையாது, பாஜக ஆட்சி, இந்த ஆட்சி கண்டிப்பாக தீவிரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேசி இருக்கிறார்.

    கடந்த வியாழக்கிழமை புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரரகள் கொலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்த தாக்குதல் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் அசாமில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் இன்று தேர்தல் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை, 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்திய பின் அமித் ஷா தொடங்கினார்.

    தியாகம் செய்துள்ளனர்

    தியாகம் செய்துள்ளனர்

    அமித் ஷா தனது பேச்சில், அசாமின் தலைமகனான உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் மனேஸ்வர் பாசுமதிரியின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு மட்டும் கிடையாது, தாக்குதலில் பலியான எல்லா வீரர்களின் குடும்பத்திற்கும் என்னுடைய இரங்கலை தெரிவிக்கிறேன். அவர்கள் நம் நாட்டிற்காக உயிரையே தியாகம் செய்துள்ளார்.

    பதில்

    பதில்

    இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ரத்தம் வீணாய் போகாது. அனைத்திற்கும் பதில் கிடைக்க வேண்டும். இந்திய ராணுவ வீரர்களின் ரத்தத்திற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். பதில் சொல்வார்கள்.

    காங்கிரஸ் ஆட்சி

    காங்கிரஸ் ஆட்சி

    இது ஒன்றும் காங்கிரஸ் ஆட்சி கிடையாது. மத்தியில் இருப்பது பாஜக ஆட்சி. காங்கிரஸ்தான் இதில் நடவடிக்கை எடுக்காது. ஆனால் இந்த பாஜக ஆட்சி இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும். இந்த தாக்குதல் முழுக்க முழுக்க பாகிஸ்தான் தீவிரவாதிகளால் செய்யப்பட்டதுதான்.

    இன்னொரு காஷ்மீர்

    இன்னொரு காஷ்மீர்

    பாகிஸ்தான் மூலம் நமது நாட்டில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அசாமும் இன்னொரு காஷ்மீர் ஆக விட மாட்டோம். அதனால்தான் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வர இருக்கிறோம். மோடி அந்த சட்டத்தை கொண்டு வருவார், என்று அமித் ஷா தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Pulwama attack: We are not Congress, We are BJP, We will pay back says, Amit Shah in Assam rally
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X