டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அனுபவித்தது போதும்.. இந்தியாவிற்கு கை கொடுக்கும் ஈரான்.. தீவிரவாதத்திற்கு எதிராக இணைய முடிவு!

இந்தியாவுடன் சேர்த்து ஈரானும் பாகிஸ்தானின் தீவிர அமைப்புகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தும் என்று ஈரான் அரசு தெரிவித்து உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவுடன் சேர்த்து ஈரானும் பாகிஸ்தானின் தீவிர அமைப்புகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தும் என்று ஈரான் அரசு தெரிவித்து உள்ளது.

புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரரகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்த தாக்குதல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் சோகத்தில் தற்போது ஈரானும் பங்கெடுத்து உள்ளது. பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது தாக்குதல்

ஈரான் மீது தாக்குதல்

புல்வாமாவில் நடந்தது போலவே அதற்கு முதல்நாள் ஈரானிலும் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. பாகிஸ்தான் ஈரான் எல்லையில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் மொத்த 27 ஈரானை சேர்ந்த இஸ்லாமிக் ரேவலூஷனரி கார்ட்ஸ் வீரர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் அல்-அடில் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று இருக்கிறது.

அதே மாதிரி

அதே மாதிரி

இந்த தாக்குதல் ஜம்முவில் நடந்த தாக்குதல் போலவே நடந்து உள்ளது. ஈரான் பாகிஸ்தான் எல்லையில் இந்த ஈரான் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவிட்டு திருப்பும் நேரத்தில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. அதேபோல் காரில் வெடிகுண்டை சுமந்து கொண்டு வந்த தீவிரவாதி, ராணுவ வீரர்களின் வாகனம் மீது மோதி வெடிகுண்டை வெடிக்க வைத்து உள்ளார்.

இரண்டு நாடுகளும்

இரண்டு நாடுகளும்

இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் இருப்பதாக ஈரான் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. இந்தியாவில் புல்வாமா தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் அரசு இருக்க வாய்ப்புள்ளது என்று குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இந்தியாவின் வெளியுறத்துறை அமைச்சரும், ஈரானின் துணை வெளியுறத்துறை அமைச்சரும் சந்தித்துக் கொண்டனர்.

என்ன ஆலோசனை

என்ன ஆலோசனை

இரண்டு நாட்டுகளிலும் நடந்த தாக்குதல் குறித்து, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த இந்த சந்திப்பில் இவர்கள் ஆலோசனை செய்தனர். அடுத்தடுத்த நாட்களில் ஒரே மாதிரி இந்த தாக்குதல் நடந்தது எப்படி என்பது குறித்து இவர்கள் ஆலோசித்தாக கூறப்படுகிறது. இதற்கு எப்படி பதில் அளிப்பது என்பது குறித்தும் இவர்கள் ஆலோசித்தாக தெரிகிறது.

என்ன டிவிட்

இதுகுறித்து டிவிட் செய்துள்ள ஈரானின் துணையை வெளியுறவுத்துறை அமைச்சர் சயீத் அப்பாஸ் ''இரண்டு மோசமான தாக்குதலில் பலரை இழந்துவிட்டு இந்தியாவும், ஈரானும் கவலையில் ஆழ்ந்து உள்ளது. இரண்டு நாடுகளும் ஒன்றாக சேர்ந்த நம் பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க உறுதி பூண்டு இருக்கிறது. இதுவரை அனுபவித்ததே போதும்!'' என்று மிகவும் கோபமாக டிவிட் செய்துள்ளார்.

English summary
Pulwama attack: We are with you as always, let's actions against terrorism says Iran, Supporting India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X