டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலர் டியூனுக்கு பதில் கொரோனா விழிப்புணர்வு ஆடியோ.. அரசு அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: எந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டாலும், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கேட்கும் வகையில் மத்திய, தொலைதொடர்பு துறை நடவடிக்கையை எடுத்துள்ளது.

Recommended Video

    Corona Virus Symptoms | Precautions

    கொரோனாவை விட அதன் மீதான பீதியால்தான் நமது நாட்டில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவும் ஒரு ப்ளூ காய்ச்சல்தான், அதை சுத்தம், சுகாதாரம் உள்ளிட்ட சிலவற்றின் மூலம், வராமல் காக்க முடியும் என மக்களுக்கு புரிய வைக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்க அவசியம் உள்ளது.

    Put coronavirus awareness messages in place of ringing tones: DoT to telcos

    இதையடுத்துதான் தொலைதொடர்பு அமைச்சகம் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. ரிங் ஒலிக்கு பதில், நாங்கள் அனுப்பியுள்ள விழிப்புணர்வு ஒலி நாடாவை ஒலிபரப்ப வேண்டும் என அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களுக்கும், தொலைதொடர்பு துறை இ-மெயில் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளது.

    ஆனால், சில டெலிகாம் ஆபரேட்டர்கள், தங்களது வாடிக்கையாளர்கள், காலர் ட்யூனுக்கு பணம் செலுத்தியிருந்தால்தான், இப்படி ஒரு வசதியை தர முடியும் என அடம் பிடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழகத்திலும் கால் வைத்தது கொரோனா.. ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 45 வயது நபருக்கு சிகிச்சைதமிழகத்திலும் கால் வைத்தது கொரோனா.. ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 45 வயது நபருக்கு சிகிச்சை

    கொரோனா வைரஸ் பரவுவதை சமாளிக்க கார்ப்பரேட் நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளன. Paytm, Twitter போன்ற சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், பயோமெட்ரிக்ஸ் முறையை நீக்கியுள்ளது. ஓலா தனது டிரைவர்களுக்கு, சானிடிசர்கள் மற்றும் முகமூடிகளை வழங்கத் தொடங்கியுள்ளது.

    English summary
    Dial any number and chances are high that you might get to hear awareness messages on coronavirus, instead of ringing tones. The move follows an order in this regard from the government which has shared the audio clip of the message with telecom operators.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X