டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிஏஏ குறித்து விமர்சிக்கும் 5 பேருடன் பிரதமர் மோடி டிவியில் விவாதிக்க வேண்டும்.. ப சிதம்பரம் யோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து நாடு முழுவதும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்த சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எந்த விவாதத்திலும் ஈடுபடவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் திங்கள்கிழமை குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக ப சிதம்பரம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சிஏஏ என்பது குடியுரிமையை கொடுப்பதே அன்றி, அதை பறிப்பது அல்ல என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி, உடன் தொடர்புடையதாக கருதப்படும் சிஏஏ பலரை குடியுரிமை அற்றவர்கள் ஆக்கும் என்றும் குடியுரிமையை அவர்களிடம் இருந்து பறிக்கும் என்றும் என்னை போன்ற பலர் நம்புகிறோம் என்று ப சிதம்பரம் தெரிவித்தார்.

Q&A Between Modi, His 5 Critics As CAA Protests Rage on: suggestion by Chidambaram

கேள்விக்கணைகளை எழுப்ப முடியாத அமைதியான மக்களிடம் உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு தான் பிரதமர் மோடி பேசுவதாக விமர்சித்த ப சிதம்பரம், தாங்கள் ஊடகங்கள் வழியாக பேசுவதாகவும், பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் பிரதமர் மோடி விமர்சகர்களுடன் பேசுவதில்லை என்று குற்றம்சாட்டிய ப சிதம்பரம், மோடியுடன் பேச விமர்சகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என்று தெரிவித்தார்.

குடியுரிமை சட்டம் குறித்து பிரதமர் மோடி 5 விமர்சகர்களுடன் நேரடியாக விவாதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள ப சிதம்பரம், தொலைக்காட்சி விவாதத்தில் பிரதமர் மோடி பேசுவதை பார்த்துவிட்டு மக்கள் சிஏஏ குறித்து முடிவெடுக்கட்டும் என்றார். தனது பரிந்துரைக்கு பிரதமர் மோடி செவி சாய்ப்பார் என நம்புவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தின் ராமகிருஷ்ணா மிஷனின் தலைமையகமான பேலூர் மடத்தில் இருந்து மோடி உரையாற்றிய ஒரு நாள் கழித்து சிதம்பரம் இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார. முன்னதாக நேற்று பேசிய பிரதமர் மோடி, புதிய குடியுரிமை சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்றும் து. சி.ஏ.ஏ குறித்து இளைஞர்களில் ஒரு பகுதியினர் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் கூறியிருந்தார்.

ஊத்தங்கரை அருகே அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு சாதனைத் தமிழன் விருது ஊத்தங்கரை அருகே அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு சாதனைத் தமிழன் விருது

English summary
Chidambaram Proposes to pm modi: The only way out is for the PM to select five of his most articulate critics and have a televised Q and A session with them. Let the people listen to the discussion and reach their conclusions on CAA. I sincerely hope PM will respond favourably to this suggestion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X