டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

52 பக்க ரபேல் ரிப்போர்ட்டில் இருக்கும் ரகசியம்.. இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட மத்திய அரசு!

ரபேல் வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கும் ஆவணங்கள் காரணமாக மத்திய அரசு மிக கடினமான இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Rafale வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    டெல்லி: ரபேல் வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கும் ஆவணங்கள் காரணமாக மத்திய அரசு மிக கடினமான இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறது.

    ரபேல் வழக்கில் மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. தேர்தலுக்கு சரியாக 24 மணி நேரத்திற்கு முன் ரபேல் வழக்கில் முக்கியமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி ரபேலில் கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. தி இந்து இதழில் வெளியான ஆதாரங்களை ஏற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

     ரபேல் விவகாரம்... மோடி அரசுக்கு கிடைத்த மிக பெரிய அடி.. டி.ராஜா பேட்டி ரபேல் விவகாரம்... மோடி அரசுக்கு கிடைத்த மிக பெரிய அடி.. டி.ராஜா பேட்டி

    ரபேல் வழக்கு

    ரபேல் வழக்கு

    ரபேல் ஊழல் தொடர்பாக தி இந்து பத்திரிக்கையில் ஆதாரங்கள் வெளியானதில் இருந்தே மத்திய அரசு இரண்டு விதமான விஷயங்களை தெரிவித்து வந்தது. முதல் விஷயம் ரபேல் ஆதாரங்களை திருடிவிட்டார்கள். இரண்டாவது விஷயம் ரபேல் ஆதாரங்களை உச்ச நீதிமன்றம் ஏற்க கூடாது. இதுதான் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வைத்த கோரிக்கைகள்.

    எங்கும் இல்லை

    எங்கும் இல்லை

    ஆனால் ரபேலில் எங்கும்.. எந்த சின்ன இடத்தில் கூட, கடைசியாக தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூட, மத்திய அரசு கசிந்த ஆவணங்கள் பொய்யான ஆவணங்கள் என்று சொல்லவில்லை. இந்த ஆவணங்கள் போலியானது, பொய்யாக உருவாக்கபட்டது என்று மத்திய அரசு எந்த ஒரு இடத்திலும் மறுக்கவில்லை.

    என்ன மத்திய அரசு

    என்ன மத்திய அரசு

    மத்திய அரசு நினைத்து இருந்தால், ஆவணங்கள் திருடு போய் இருக்கிறது என்பதற்கு பதிலாக ஆவணங்கள் போலியானது என்று கூறி தப்பித்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் எங்குமே மத்திய அரசு அப்படி கூறவில்லை. இதை கசியவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டும்தான் அரசு கூறியது.

    இதனால் என்ன

    இதனால் என்ன

    இதுதான் தற்போது பிரச்சனையாகி உள்ளது. இதனால் இனி வரும் விசாரணைகளின் போது இந்த ஆதாரங்களுக்கு மத்திய அரசு பதில் சொல்லியாக வேண்டும். அதாவது இந்த ஆதாரங்களை பொய் என்று மத்திய அரசு சொல்ல முடியாது. மாறாக அந்த ஆதாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லை ஆதாரங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இப்படி ஒரு மோசமான இடியாப்ப சிக்கலில் மத்திய அரசு மாட்டி இருக்கிறது.

    முக்கிய ரிப்போர்ட்

    முக்கிய ரிப்போர்ட்

    அதேபோல் இந்த வழக்கில் இந்திய ஒப்பந்ததாரர் குழு சமர்ப்பித்த 52 பக்க கடைசி அறிக்கையும் விசாரணை செய்யப்பட இருக்கிறது. இதில் கடைசி 4 பக்கத்தில்தான் பிரதமர் அலுவலகத்திற்கு எதிரான குற்றச்சாட்டு உள்ளது. இந்த 52 பக்கங்கள்தான் இந்த வழக்கின் தலைவிதியை நிர்ணயிக்கும்.

    என்ன நடக்குமோ

    என்ன நடக்குமோ

    இதில் பெரும்பாலான ஆவணங்கள் பிரதமர் மோடியின் அலுவலகத்தை நேரடியாக குற்றஞ்சாட்டுகிறது. அதேபோல் அனில் அம்பானி குறித்தும் நேரடி குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஆவணங்கள் என்ன மாதிரியான விஷயங்களை கொண்டு வர போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    Rafale Case: The 52 page INT report on the deal may bring real truth behind the scam allegations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X