டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரபேல்.. 2002ல் தொடங்கிய பரபரப்பு.. 2019 வரை விடாமல் நீடித்த சலசலப்பு.. ஒரு பார்வை

Google Oneindia Tamil News

Recommended Video

    Rafale வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    டெல்லி: ரபேல் ஒப்பந்த வழக்கினை மீண்டும் விசாரிக்க போவதாக உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பது ஆளும் மோடி அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    உச்சநீதிமன்றம் இது தொடர்பான மறு ஆய்வு மனுவினை ஏற்றுக்கொண்டதோடு, ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முழு விஷயங்களையும் விசாரிக்கும் நாள்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    தேர்தல் நெருங்கிய வேளையில் ரபேல் விவகாரத்தில் இப்படி ஒரு திருப்பம் வந்துள்ளது. முன்னதாக இதுவரை இந்த ரபேல் ஒப்பந்தம் மற்றும் அதற்காக போடப்பட்ட வழக்குகள் உள்ளிட்டவை கடந்து வந்த பாதை குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

    52 பக்க ரபேல் ரிப்போர்ட்டில் இருக்கும் ரகசியம்.. இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட மத்திய அரசு! 52 பக்க ரபேல் ரிப்போர்ட்டில் இருக்கும் ரகசியம்.. இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட மத்திய அரசு!

     போர் விமானங்கள்

    போர் விமானங்கள்

    டிசம்பர் 30, 2002: ராணுவ கொள்முதல் நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    ஆகஸ்டு 28 2007: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சகம், 126 போர் விமானங்களை வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    ரிலையன்ஸ் நிறுவனம்

    ரிலையன்ஸ் நிறுவனம்

    செப்டம்பர் 4, 2008: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்த போர் விமான ஒப்பந்தத்தை வாங்குவதில் முன்னணியில் இருந்தது.

    ரபேல் விமானம்

    ரபேல் விமானம்

    மே 2011: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விமானத்துறை அமைச்சகம் ரபேல் மற்றும் ஐரோப்பிய பைட்டர் ஜெட்ஸ் விமானங்களை வாங்க இறுதி செய்து வைத்தது.

    ஜனவரி 30, 2012: டசால்ட் விமான தயாரிப்பு நிறுவனம் இறுதியில் மிககுறைவான விலைக்கு ரபேல் போர் விமானங்களை தருவதாக ஒப்புக்கொண்டது.

    ஹெச்ஏஎல் ஒப்பந்தம்

    ஹெச்ஏஎல் ஒப்பந்தம்

    மார்ச் 13, 2014: இதன் பின்னர் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் டசாலட் நிறுவனம் இணைந்து 70க்கு 30 என்ற ரீதியில் வேலைகளை செய்து 108 விமானங்களை தயாரித்து தர வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.அதாவது 18 விமானத்தை பறக்கும் நிலையில் தர வேண்டும். மீதி 108 விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து தரவேண்டும் என கூறப்பட்டது.

    18 விமானங்கள்

    18 விமானங்கள்

    ஆகஸ்டு 8, 2014: பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லி, நாடாளுமன்றத்தில், முதல் 18 போர் விமானங்களை பறக்கும் நிலையில் தயாரித்து 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் வழங்க வேண்டும். மீதமுள்ள 108 விமானங்களை அடுத்த 7 ஆண்டுக்குள் வழங்க வேண்டும் என அறிவித்தார்.

    மத்திய அரசு பேச்சு

    மத்திய அரசு பேச்சு

    ஏப்ரல் 8 2015: இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் கூறுகையில், டெசால்ட், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் மற்றும் மத்திய அரசு இடையே போர் விமானம் வாங்குவது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்தார்.

    பிரான்ஸ் ஒப்பந்தம்

    பிரான்ஸ் ஒப்பந்தம்

    ஏப்ரல் 10, 2015: இதனிடையே 36 ரபேல் போர் விமானங்களை பறக்கும் நிலையில் தயாரித்து வழங்கும் புதிய ஒப்பந்தம் பெற்று இருப்தாக பிரான்ஸ் அறிவித்தது.

    ஜனவரி 26, 2016: இந்தியா- பிரான்ஸ் இடையே 36 போர் விமானங்களை தயாரித்து தருவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்கசங்களின் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.செப்டம்பர் 23, 2016: இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
    670 கோடி ரூபாய்

    670 கோடி ரூபாய்

    நவம்பர் 18 2016: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ரபேல் போர் விமானம் ஒன்று சுமார் 670 கோடி என்றும், அனைத்து போர் விமானங்ளும் ஏப்ரல் 2022ம் ஆண்டுக்குள் டெலிவரி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.

    டிசம்பர் 31 2016: பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் 36 போர் விமானங்களின் ஒட்டுமொத்த தொகை ரூ.60,000 கோடி என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது நாடாளுமன்றத்தில் 2016ம் ஆண்டு நவம்பரில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டதை விட 2 மடங்கு அதிகமாக இருந்தது.
    உச்சநீதிமன்றத்தில் முறையீடு

    உச்சநீதிமன்றத்தில் முறையீடு

    மார்ச் 13, 2018: பிரான்சிடம் இருந்து 36 போர் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் முன்பு தாக்கல் செய்யப்பட்ட விமானத்தின் விலை குறித்து குறிப்பிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஒப்பந்தத்துக்கு தடை

    ஒப்பந்தத்துக்கு தடை

    செப்டம்பர் 5 2018: ரபேல் போர் விமான முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

    செப்டம்பர் 18, 2018: உச்சநீதிமன்றம் ரபேல் போர் விமான ஒப்பந்ததுக்கு அக்டோபர் 10ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தது.
    வழக்கு ஒத்திவைப்பு

    வழக்கு ஒத்திவைப்பு

    அக்டோபர் 8, 2018: சீலிடப்பட்ட உரையில் ரபேல் ஒப்பந்தம் குறித்து ஆவணத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது வழக்கை அக்டோபர் 10ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

    அக்டோபர் 10, 2018: சீலிடப்பட்ட கவரை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ரபேல் ஒப்பந்தத்தை எப்படி அரசு மேற்கொண்டது, அதற்காக எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த முழு விவரங்களை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
    ரபேல் முறைகேடு

    ரபேல் முறைகேடு

    அக்டோபர் 24, 2018: முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா மற்றும் அருண்ஜோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் ரபேல் முறைகேடு தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தை நாடினர்.

    அக்டோபர் 31, 2018: ரபேலின் 36 போர் விமானங்களின் விலை விவரத்தை 10 நாட்களுக்குள் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
    எப்படி ஒப்பந்தம்

    எப்படி ஒப்பந்தம்

    நவம்பர் 12 2018: மத்திய அரசு 36 போர் விமானங்களின் விலை குறித்து சீலிடப்பட்ட கவரில் வைத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும் அந்த மனுவில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் எப்படி செய்யப்பட்டது என்பது குறித்த விரிவான விளக்கமும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    நவம்பர் 14 2018: ரபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
    விதிமீறல் இல்லை

    விதிமீறல் இல்லை

    டிசம்பர் 14 2018: மோடி தலைமையிலான பாஜக அரசு, ரபேல் ஒப்பந்தம் மேற்கொண்டதில் எந்தவிதமான முறைகேடும் நடைபெற்றதாக தெரியவில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், ரபேல் ஒப்பந்தத்துக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரியும், எப்ஐஆர் பதிவிட உத்தரவிடக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்து நாளேடு ஆவணம்

    இந்து நாளேடு ஆவணம்

    ஏப்ரல் 10 2019: தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவினை ஏற்று ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்கப் போவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. திருடப்பட்டு இந்து நாளேட்டில் வெளியிடப்பட்ட ரபேல் தொடர்பான ஆவணங்களை ஏற்கக்கூடாது என வாதிட்ட மத்திய அரசின் வாதங்களையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

    English summary
    The Supreme Court while dealing a major setback to the Centre said that it would review its verdict in the Rafale case. Following is the chronology of events in the Rafale deal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X