டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரபேல் விவகாரம்… மோடி அரசுக்கு கிடைத்த மிக பெரிய அடி.. டி.ராஜா பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    Rafale வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    டெல்லி: ரபேல் போர் விமான பேரத்தை தன்னிச்சையாக முடிவு செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

    ரபேல் வழக்கில் அரசின் ஆட்சேபங்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம், புதிய ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. திருடப்பட்ட ஆவணங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

     Rafale deal: biggest blow to the Modi government Says D. Raja

    மேலும், ரபேல் விவகாரம் தொடர்பான பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆவணங்கள் விசாரணைக்கு உகந்தவை தான் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.அந்த வகையில், ரபேல் கொள்முதல் முறைகேடு பற்றி பிரதமர் மோடி பதில் கூறியே ஆக வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு மோடி அரசுக்கு கிடைத்த மிக பெரிய அடி எனவும் டி.ராஜா கூறியுள்ளார்.

    விடிஞ்சா வாக்கு பதிவு.. முதல் நாளில் பாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரபேல் தீர்ப்பு.. ! விடிஞ்சா வாக்கு பதிவு.. முதல் நாளில் பாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரபேல் தீர்ப்பு.. !

    கடந்த தேர்தலில், போபஸ் ஊழல் , 2 ஜி விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக கூறும் அரசியல் விமர்சகர்கள், இந்த தேர்தலில் ரபேல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளதால், பாஜகவுக்கு கடும் சவால் காத்திருப்பதாக கூறுகின்றனர்.

    English summary
    Rafalel deal: Prime Minister Modi must answer- D.Raja assertion
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X