டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரபேல் பற்றிய சிஏஜி அறிக்கை.. லோக்சபாவில் பட்ஜெட்டுடன் தாக்கல்?.. விலையும் வெளியாகிறது!

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை அடுத்த வாரம் பட்ஜெட்டுடன் சேர்த்து லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: ரபேல் ஒப்பந்த தொடர்பான சிஏஜி அறிக்கை அடுத்த வாரம் பட்ஜெட்டுடன் சேர்த்து லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

வரும் பிப்ரவரி 1ம் தேதி லோக்சபாவில் பாஜக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் ஆகும் இது.

இதில் பாஜக பல முக்கிய திட்டங்களை கொண்டு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த நிலையில் இந்த பட்ஜெட்டுடன் சேர்த்து ரபேல் ஒப்பந்தம் குறித்த அறிக்கைகள் தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறுகிறார்கள்.

என்ன தீர்ப்பு

என்ன தீர்ப்பு

ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கு ஆகும் இது. ஆனால் இது மத்திய அரசின் கொள்கை முடிவு, இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சிஏஜி அறிக்கை

சிஏஜி அறிக்கை

முக்கியமாக, இந்த வழக்கு விசாரணையின் போது சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அது பரிசோதிக்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது. அதன்பின் இந்த வரிகள் மாற்றப்பட்டது. தீர்ப்பிற்கு பின்பே இதுகுறித்த சிஏஜி அறிக்கை முழுமையாக தயார் செய்யப்பட்டது.

தாக்கல் செய்கிறார்கள்

தாக்கல் செய்கிறார்கள்

இந்த நிலையில்தான் இந்த ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. பட்ஜெட்டுடன் சேர்த்து ரபேல் ஒப்பந்தம் குறித்த அறிக்கைகள் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறுகிறார்கள். இது தேர்தல் சமயத்தில் உதவும் என்பதால் தாக்கல் செய்ய இருப்பதாக கூறுகிறார்கள்.

விலை என்ன

விலை என்ன

இந்த நிலையில் இதில் ரபேல் விமானத்தின் விலை குறித்து விவரம் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். மத்திய அரசு இதை இன்னும் மறைமுகமாக வைத்து இருக்கிறது. இதை சிஏஜி அறிக்கையில் தெரிவிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதே சமயம் இதில் விலை குறித்த விவரம் இல்லை என்றாலும் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்த விலையை விட குறைவா அதிகமா என்ற விவரம் சிஏஜி அறிக்கையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

English summary
Rafale deal: CAG report on the deal may be submitted in this Budget session.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X