டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ரபேல் ஒப்பந்த சிஏஜி அறிக்கை.. இன்று தாக்கலாகிறது?

ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டது தொடர்பான சிஏஜி அறிக்கை இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேலில் திருப்பம்! பரபரப்பிற்கு உள்ளாக்கிய ஒரே கடிதம்- வீடியோ

    டெல்லி: ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டது தொடர்பான சிஏஜி அறிக்கை இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. இன்று காலை இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படலாம்.

    ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டது, 2016 செப்டம்பர் 23ம் தேதி. இந்திய நடைமுறைப்படி பார்த்தால், இந்த ஒப்பந்தத்திற்கான சிஏஜி அறிக்கை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

    ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் ஒரு வருட தயாரிப்பிற்கு பின் இன்று இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

    என்ன ஒப்பந்தம்

    என்ன ஒப்பந்தம்

    ரபேல் ஒப்பந்தம் எவ்வளவு விலையில் செய்யப்பட்டது என்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் பிரச்சனையே. காங்கிரஸ் ஆட்சியில் ரபேல் ஒப்பந்தத்தில் ஒரு விமானம் 526 கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் ஒரு விமானம் ரூ.1640 கோடிக்கு விலை பேசப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைக்கிறது. இதனால் இந்தியாவிற்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது.

    இந்திய ஒப்பந்தம்

    இந்திய ஒப்பந்தம்

    காங்கிரஸ் 126 விமானங்களை வாங்குவதாக இருந்தது. அதோடு ரபேல் தொழில்நுட்பத்தை எச்ஏஎல்லிடம் பகிர்ந்து கொள்ளவும் திட்டமிட்டு இருந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் அந்த ஒப்பந்தம் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. அதோடு 36 விமானங்கள் வாங்க மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டது.

    சிஏஜி அறிக்கை

    சிஏஜி அறிக்கை

    இந்த நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கைதான் இன்று தாக்கலாக இருக்கிறது. ரபேல் வழக்கின் உச்ச நீதிமன்ற விசாரணையின் முடிவில், சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அது பரிசோதிக்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது. அதன்பின் இந்த வரிகள் மாற்றப்பட்டது. தீர்ப்பிற்கு பின்பே இதுகுறித்த சிஏஜி அறிக்கை முழுமையாக தயார் செய்யப்பட்டது.

    விலை இருக்கும்

    விலை இருக்கும்

    இந்த சிஏஜி அறிக்கையில் ஒரு விமானத்தின் தனிப்பட்ட விலை என்ன என்பது இருக்கும் என்று கூறுகிறார்கள். அதன்பின் இந்த அறிக்கை எதிர்கட்சித் நாடாளுமன்ற தலைவரை கொண்ட, பிஏசி அமைப்பிடம் அளித்து சோதனைப்படுத்தப்படும். இந்த அறிக்கை மூலம் ரபேல் ஒப்பந்தம் குறித்த அனைத்து விவரங்களும் வெளியாகிவிடும் என்பதால் இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    English summary
    Rafale deal: CAG report on the France deal will be submitted today in Lok Sabha most likely.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X