டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரபேல் பேரத்தில் மோடி தலையிட்டது உண்மைதானா? பாரிக்கரின் ''நோட்'' வெளியானதால் பரபரப்பு!

ரபேல் ஊழல் தொடர்பாக காலையில் வெளியான கடிதத்தின் இன்னொருபக்கம் தற்போது வெளியாகி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேலில் திருப்பம்! பரபரப்பிற்கு உள்ளாக்கிய ஒரே கடிதம்- வீடியோ

    டெல்லி: ரபேல் ஊழல் தொடர்பாக காலையில் வெளியான கடிதத்தின் இன்னொருபக்கம் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த கடிதத்திற்கு அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் எழுதிய பதில் இதில் இடம்பெற்றுள்ளது.

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வெளியாகி உள்ள பாதுகாப்பு துறையின் கடிதம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தற்போது ரபேல் பிரச்சனை மீண்டும் உயிர் பெற்று இருக்கிறது.

    இந்த கடிதம் பாதுகாப்பு துறை அதிகாரிகளால், பாதுகாப்பு அமைச்சருக்கு எழுதப்பட்ட கடிதம் ஆகும். இதுதான் தற்போது வெளியே கசிந்து உள்ளது.

    என்ன இருக்கிறது

    என்ன இருக்கிறது

    அந்த கடிதத்தில் பிரதமர் மோடி, ரபேல் ஒப்பந்தம் நடந்த போது, தனியாக ரபேல் தொடர்பான பேரத்தை மறைமுகமாக பிரான்ஸ் நாட்டுடன் நடத்தினார். வேறு சிலர் பயன் அடைய வேண்டும் என்று தனி பேரத்தை பேசினார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழுவை மீறி பிரதமர் மோடி ஆலோசனை செய்தார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

    முழு கடிதம்

    முழு கடிதம்

    தற்போது இது தொடர்பான முழு கடிதம் வெளியாகி இருக்கிறது. அதாவது அந்த கடிதத்தில், கீழ் பகுதியில் அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் எழுதிய பதில் இதில் இடம்பெற்று இருக்கிறது. இந்த புகாருக்கு அதே கடிதத்தில் மனோகர் பாரிக்கர் பதில் எழுதி உள்ளார். அதன் விவரங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    என்ன பதில்

    அதில் மனோகர் பாரிக்கர் அளித்திருக்கும் பதிலில், இந்த விஷயம் தொடர்பாக கடிதம் எழுதி இருக்கும் மோகன் குமார், பிரதமர் அலுவலகத்துடன் பேச வேண்டும். பிரதமர் மோடியிடம் பேசி இந்த பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுங்கள், என்று அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

    உறுதியாகிறது

    உறுதியாகிறது

    இதனால் தற்போது பிரதமர் மோடி இந்த ஒப்பந்தத்தில் தலையிட்டு இருக்கிறார் என்பது உறுதியாகிறது என்கிறார்கள். பிரதமர் தலையிட்டதன் காரணத்தால்தான், பாதுகாப்பு துறை அமைச்சர், பிரதமர் மோடியுடன் பேசி சரி செய்து கொள்ளுங்கள் என்று கூறினார் என்கிறார்கள். பிரதமர் மோடி தலையிடவில்லை என்றால், அவர் அப்படி பதில் அளிக்க வேண்டியதில்லை என்கிறார்கள்.

    English summary
    Then Defence Minister Manohar Parrikar’s reply to MoD dissent note on #Rafale negotiations. "Defence Secretary (G Mohan) may resolve the matter in consultation with Principal Secretary to PM.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X