டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரபேல் வழக்கு.. முதல் நாளே பரபரப்பு.. நீதிபதிகள் போட்ட அதிரடி ஆர்டர்.. காரசார வாதம்!

ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு மனுக்கள் மீதான வாதத்தில் புதிய ஆதாரங்கள் எதையும் கருத்தில் கொள்ள மாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேல் டீலில் பாஜக அரசு செய்த தவறால் இத்தனை கோடி இழப்பா?

    டெல்லி: ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு மனுக்கள் மீதான வாதத்தில் புதிய ஆதாரங்கள் எதையும் கருத்தில் கொள்ள மாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் தொடங்கி உள்ளது. மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இதை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு மீதான விசாரணை ஓபன் - கோர்ட்டில் நடத்தப்படுகிறது. இதில் முதல் நாளே காரசார விவாதம் வைக்கப்பட்டது.

    முதலில் விசாரணை தொடங்கும் முன் நீதிபதிகள் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துவிட்டுதான் விசாரணையை ஆரம்பித்தனர்.

     ரஞ்சன் கோகாய் வாதம்

    ரஞ்சன் கோகாய் வாதம்

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பேசியதாவது, ரபேல் வழக்கில் புதிய ஆதாரங்களை விசாரிக்க முடியாது. பழைய ஆதாரங்களை மட்டுமே மீண்டும் விசாரணை செய்வோம். ரபேல் தொடர்பாக வெளியான கட்டுரைகளை கருத்தில் கொள்ள மாட்டோம். ரபேல் தொடர்பாக வெளியான செய்தி தாள்களில் வந்த புதிய கட்டுரைகள், ஆதாரங்களை விசாரிக்க மாட்டோம், என்றார்.

    ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது முக்கிய விசாரணை! ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது முக்கிய விசாரணை!

    பூஷன் வாதம்

    பூஷன் வாதம்

    அதன்பின் வாதத்தை தொடங்கிய மனுதாரர் மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்,ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நாங்கள் கோரவில்லை. நீதிமன்றம் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறது. ரபேல் ஒப்பந்தத்தில் உள்ள ஊழலை மட்டுமே விசாரிக்க சொல்கிறோம். நீதிமன்றம் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    பொய்

    பொய்

    மத்திய அரசு நீதிமன்றத்தில் பொய்யான ஆதாரங்களை அளித்து இருக்கிறது. பொய்யான ஆதாரங்களை நம்பித்தான் இந்த தீர்ப்பே வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் பொய்யான தகவல் அளித்தவர்களை தண்டிக்க வேண்டும். தெரிந்தே அவர்கள் நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் ஏமாற்றியுள்ளனர்.

    பதில் வாதம்

    பதில் வாதம்

    இதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் பதில் வாதம் வைத்தார். அதில், ரபேல் தொடர்பாக முக்கிய ஆவணங்களை திருடி செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். அரசு ஒப்பந்த ரகசியங்களை தவறுதலாக கசியவிட்டு இருக்கிறார்கள். ஆவணங்களை கசியவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேசிய பாதுகாப்பு

    தேசிய பாதுகாப்பு

    நான் பேசுவது இது தேசிய பாதுகாப்பு தொடர்பானது. நீதிமன்ற தீர்ப்பை மாற்ற வேண்டும் என்பதற்காக கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். இதுவும் ஒரு வகையில் நீதிமன்ற அவமதிப்புதான். உணவு இடைவேளைக்காக நீதிமன்ற விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது, என்றார்.

    முடியாது

    முடியாது

    இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஆம் ஆத்மி சஞ்சய் தொடுத்த மனுக்களை விசாரிக்க மாட்டோம். சஞ்சய் நீதிமன்றத்தை எதிர்த்து இழிவாக பேசி இருக்கிறார். சஞ்சய் கூறியதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. ரபேல் தீர்ப்பு வந்த பின் அவர் நீதிமன்றத்தை இழிவுபடுத்தி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    English summary
    Rafale Deal: Supreme Court says that they won't consider new materials as evidence in review case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X