டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரபேல் மறுசீராய்வு.. சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பாக நடந்த விசாரணை.. மார்ச் 14க்கு ஒத்திவைப்பு!

ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

டெல்லி: ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தனர்.

இதோ ரபேல் வழக்கு மூன்று மாதங்களுக்கு பின் இப்போது உயிர்பெற்றுவிட்டது. ஆகாயத்தில் இந்திய வான்படை சாதனையை நிகழ்த்தி ஒரு வாரத்திற்குள் ரபேல் வழக்கு விசாரணை தொடங்கி உள்ளது. ரபேல் வழக்கு இன்றில் இருந்து மீண்டும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். இதில் இந்தியாவிற்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது என்று இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.

சென்னை கடற்படை தளம் மீது 10 நிமிடம் வட்டமிட்ட டிரோன்.. போலீஸில் புகார் சென்னை கடற்படை தளம் மீது 10 நிமிடம் வட்டமிட்ட டிரோன்.. போலீஸில் புகார்

என்ன விசாரணை

என்ன விசாரணை

ரபேல் ஒப்பந்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிமன்ற கண்காணிப்பில் இந்த ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் இதில் விசாரணை நடந்து வந்தது.

தீர்ப்பு

தீர்ப்பு

காங்கிரஸ் செய்த ஒப்பந்தத்தை விட பாஜக அரசு மிக மோசமான ஒப்பந்தம் செய்து அதிக விலைக்கு குறைந்த விமானங்களை வாங்கி உள்ளது. அதேபோல் இதில் இந்திய ஒப்பந்ததாரர் எச்ஏஎல் மாற்றப்பட்டு, ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளது என்று புகார்கள் வைக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் தீர்ப்பானது அரசுக்கு சாதகமாக வந்தது

மீண்டும்

மீண்டும்

இந்த வழக்கில் கடந்த முறை விசாரணையின் போது முக்கிய ஆதாரங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தனர்.

<strong>ரபேல் வழக்கு.. முதல் நாளே பரபரப்பு.. நீதிபதிகள் போட்ட அதிரடி ஆர்டர்.. காரசார வாதம்! </strong>ரபேல் வழக்கு.. முதல் நாளே பரபரப்பு.. நீதிபதிகள் போட்ட அதிரடி ஆர்டர்.. காரசார வாதம்!

மனுக்கள்

மனுக்கள்

இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. கடந்த இரண்டு வாரம் முன் நடந்த விசாரணையில் இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஏமாற்றி பொய் சொல்லி இருக்கிறது என்று கூறப்பட்ட வழக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்று மீண்டும்

இன்று மீண்டும்

இதன் மீது இன்று விசாரணை தொடங்கி இருக்கிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இதை விசாரித்தது. இந்த வழக்கு மீதான விசாரணை ஓபன் - கோர்ட்டில் நடத்தப்படுகிறது. ஓபன் - கோர்ட்டில் நடந்த இந்த வழக்கு விசாரணையை யார் வேண்டுமானாலும் வந்து பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் இன்று பரபரப்பான விசாரணை நடந்தது. இதையடுத்து இதன் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

English summary
Rafale Deal: Supreme Court starts to hear the review petitions of its judgment in open court from today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X