டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரபேல் ஒப்பந்தம்.. உண்மையில் நடந்தது என்ன?.. சிஏஜி அறிக்கையில் உள்ள முக்கிய தகவல்கள்!

காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட ரபேல் ஒப்பந்தத்தை விட குறைந்த விலையில் பாஜக அரசு ரபேல் ஒப்பந்தம் செய்து இருக்கிறது என்று ரபேல் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேல் ஒப்பந்தம்: சிஏஜி அறிக்கையில் உள்ள முக்கிய தகவல்கள்!- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட ரபேல் ஒப்பந்தத்தை விட குறைந்த விலையில் பாஜக அரசு ரபேல் ஒப்பந்தம் செய்து இருக்கிறது என்று ரபேல் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை தற்போது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் இன்று காலை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த அறிக்கையை ராஜ்ய சபாவில் தாக்கல் செய்தார்.

    Rafale Deal: The delivery schedule of the18 aircraft is better than the one proposed says CAG

    காங்கிரஸ் பாஜக மீது வைத்து வந்த குற்றச்சாட்டுகள் பலவற்றுக்கு இதில் பதில் இருக்கிறது. இந்த பரபரப்பான சிஏஜி அறிக்கையில் அடங்கி உள்ள சில முக்கிய விஷயங்கள்

    • இந்த சிஏஜி அறிக்கை 141 பக்கங்கள் கொண்டது. இதில் 11 விமான கொள்முதல் ஒப்பந்தம் குறித்த விவரங்கள் உள்ளது.
    • இந்த விமான கொள்முதல் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. முதல் பாகத்தில் 10 விமான கொள்முதல் ஒப்பந்தம் குறித்த விவரம் உள்ளது.
    • இரண்டாவது பாகத்தில் ரபேல் ஒப்பந்தம் குறித்த விவரம் உள்ளது.
    • ரபேல் ஒப்பந்தம் குறித்து 32 பக்கத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
    • ரபேல் ஒப்பந்தத்தில் தொடக்கத்தில், பிரான்சின் ரபேல் விமானம் , ஐரோப்பாவின் யூரோஃபைட்டர் டைபூன் ஜெட் உட்பட 6 விமானங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
    • கடைசியில் பிரான்சின் ரபேல் விமானம் , ஐரோப்பாவின் யூரோஃபைட்டர் டைபூன் ஜெட் விமானம் தேர்வு செய்யப்பட்டு, இறுதியாக பிரான்சின் ரபேல் விமானம் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் நடந்துள்ளது.
    • காங்கிரஸ் ஆட்சியை விட 2.86% குறைவான விலையில் ரபேல் ஒப்பந்தம் பாஜக ஆட்சியில் போடப்பட்டுள்ளது.
    • ஆனால் குறைவான விலை என்று கூறினாலும் எவ்வளவு விலைக்கு விமானம் வாங்கப்பட உள்ளது என்று அறிக்கையில் கூறப்படவில்லை.
    • இந்த ஒப்பந்தத்தில் 18 விமானங்கள் மிகவும் தரமாக இருப்பதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டதை விட வேகமாக விமானம் டெலிவரி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

    English summary
    CAG report tabled in Rajya Sabha today: The delivery schedule of the first 18 Rafale aircraft is better than the one proposed in the 126 aircraft deal, by five months. #RafaleDeal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X