டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங்கிரஸ் வைத்திருந்த பிரம்மாஸ்திரம் வீழ்ந்தது.. ரபேல் வழக்கில் பாஜகவிற்கு பெரும் நிம்மதி!

பாஜகவை கடந்த 1 வருடமாக ஆட்டிப்படைத்துக் கொண்டு இருந்த ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் இருந்து தற்போது பாஜகவிற்கு பெரிய நிம்மதி கிடைத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேல் தொடர்பாக 5 மனுக்களும் தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு- வீடியோ

    டெல்லி: பாஜகவை கடந்த 1 வருடமாக ஆட்டிப்படைத்துக் கொண்டு இருந்த ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் இருந்து தற்போது பாஜகவிற்கு பெரிய நிம்மதி கிடைத்து இருக்கிறது.

    ரபேல் ஒப்பந்தத்தில் மத்திய பாஜக அரசு ஊழல் செய்து இருக்கிறது. பாஜக செய்த முறைகேடான ஒப்பந்தம் காரணமாக 50,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்து.

    இது தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு ஒருமாதத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டது.

    ரபேல் கொள்முதல் தொடர்பாக விசாரணை தேவையில்லை.. 5 மனுக்களும் தள்ளுபடி.. சுப்ரீம் கோர்ட் அதிரடி! ரபேல் கொள்முதல் தொடர்பாக விசாரணை தேவையில்லை.. 5 மனுக்களும் தள்ளுபடி.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!

    பெரிய தீர்ப்பு

    பெரிய தீர்ப்பு

    இந்த நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், ரபேல் ஒப்பந்தம் மத்திய அரசின் கொள்கை முடிவு. அதில் தலையிட முடியாது. இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை, இதில் முறைகேடு நடந்திருப்பதாக தெரியவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    பெரிய நிம்மதி

    பெரிய நிம்மதி

    இந்த தீர்ப்பு காரணமாக பாஜக பெரிய நிம்மதி அடைந்துள்ளது. தலைக்கு மேல் தொங்கி கொண்டு இருந்த கத்தி தற்போது காணாமல் போய் உள்ளது. பல நாட்களாக செய்தியாளர்களை தவிர்த்து வந்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இனி தைரியமாக செய்தியாளர்களை சந்தித்து பேச முடியும்.

    மொத்தமாக நிம்மதி

    மொத்தமாக நிம்மதி

    மத்திய அரசு ரிலையன்ஸ் உடன் செய்யப்பட்ட ஒப்பந்தம், குறைவாக வாங்கப்பட்ட விமானங்கள் என்று எதற்கும் உச்ச நீதிமன்றம் கண்டனமோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. இதனால் இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு செய்த அனைத்து நடைமுறைகளும் எந்த விதத்திலும் தவறானது கிடையாது என்று நிரூபணம் ஆகியுள்ளது. இது மத்திய அரசுக்கு பெரிய அசுவாசத்தை அளித்துள்ளது.

    காங்கிரஸ் தோல்வி

    காங்கிரஸ் தோல்வி

    இந்த வழக்கை வைத்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யலாம் என்று காங்கிரஸ் நினைத்தது. ஆனால் அந்த கனவு மொத்தமாக கலைந்து போய் உள்ளது. ரபேல் ஒப்பந்தத்தை மலைபோல் நம்பி இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளார். காங்கிரஸ் வைத்திருந்த மிகப்பெரிய பிரம்மாஸ்திரம் ஒன்றுமில்லாமல் போய் உள்ளது.

    English summary
    Rafale Deal Verdict: Huge setback for Rahul, BJP may relief now from the case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X