டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரபேல் ஆவணங்கள் உண்மை என்பது உறுதியாகிவிட்டது.. மோடியை விசாரியுங்கள்.. ராகுல் பகீர் பேட்டி!

ரபேல் ஒப்பந்தம் மூலம் பிரதமர் மோடி ரூ.30000 கோடியை திருடிவிட்டார், அதை முதலில் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேல் ஆவணங்கள் உண்மை என்பது உறுதியாகிவிட்டது.. ராகுல் பகீர் பேட்டி!- வீடியோ

    டெல்லி: ரபேல் ஒப்பந்தம் மூலம் பிரதமர் மோடி ரூ.30000 கோடியை திருடிவிட்டார், அதை முதலில் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.

    ரபேல் ஊழல் விவகாரம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. நேற்று உச்ச நீதிமன்றத்தில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நடந்த வாதம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் ரபேல் வழக்கு தொடர்பாகவும், ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டது தொடர்பாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்து இருக்கிறார். அவர் பிரதமர் மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

    ரபேல் ஆவணங்களை வெளியிட உதவியது யார்? என்ன நடந்தாலும் சொல்ல மாட்டேன்.. என்.ராம் அதிரடி!ரபேல் ஆவணங்களை வெளியிட உதவியது யார்? என்ன நடந்தாலும் சொல்ல மாட்டேன்.. என்.ராம் அதிரடி!

    பேட்டி

    பேட்டி

    ராகுல் தனது பேட்டியில், ரபேல் ஆவணங்களை காணவில்லை என்று அரசு கூறுகிறது. அப்படியென்றால் வெளியான ஆவணங்கள் எல்லாம் உண்மையானது. அரசே இதை இப்போது ஒப்புக்கொண்டு இருக்கிறது. ஆகவே பிரதமர் மோடி ரபேலில் தனியாக பேரம் பேசியதும் உண்மைதான் என்று வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.

    மோடி ரபேல்

    மோடி ரபேல்

    ரபேல் ஆவணங்களை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். அதில் எந்த தவறும் இல்லை. சட்டப்படி இதில் செயல்படுங்கள். அதே சமயம் பிரதமர் மோடி குறித்து விசாரணை நடத்துங்கள். பிரதமர் மோடி ஏன் ரபேலில் தனியாக பேரம் நடத்தினார் என்று விசாரியுங்கள். அதையும் செய்யுங்கள்.

    ஆதாரம் திருடிவிட்டார்

    ஆதாரம் திருடிவிட்டார்

    செய்தியாளர்கள் ஆதாரங்களை திருடிவிட்டார்கள் என்று அரசு குற்றஞ்சாட்டுகிறது. பிரதமர் மோடி ரூ.30,000 கோடியை திருடிவிட்டார், முதலில் பிரதமர் மீது விசாரணை நடத்த வேண்டும். அதன்பின் ரபேல் ஆவணங்களை திருடியவர்களை விசாரிக்கலாம்.

    தாக்குதல்

    தாக்குதல்

    இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை நான் எந்த கேள்வியும் கேட்கவில்லை. கேள்வி கேட்பது சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்கள்தான். நீங்கள் நடத்திய தாக்குதலை குறித்து அவர்கள்தான் விவரங்கள் கேட்கிறார்கள். நாங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறோம், எங்களுக்கு ஆதாரங்களை காட்டுங்கள் என்று அவர்கள்தான் கேட்கிறார்கள்.

    ஏன் கூட்டணி

    ஏன் கூட்டணி

    எங்கள் தேர்தல் கூட்டணி சிறப்பாகவே இருக்கிறது. பல இடங்களில் நாங்கள் மிகவும் வலுவாக இருக்கிறோம். டெல்லியில் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. டெல்லி கட்சி நிர்வாகிகள் எல்லோரும் கூடி ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    English summary
    Congress President Rahul Gandhi: On one hand you are saying the documents are missing, so this means the documents are genuine and its clearly written in them that PMO was carrying out parallel negotiations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X