டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரபேல் ஆவணங்களை திருடிவிட்டார்கள்.. சுப்ரீம் கோர்ட்டில் அரசு பரபர குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?

ரபேல் தொடர்பான முக்கிய ஆதாரங்களை திருடி இருக்கிறார்கள் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேல் டீலில் பாஜக அரசு செய்த தவறால் இத்தனை கோடி இழப்பா?

    டெல்லி: ரபேல் தொடர்பான முக்கிய ஆதாரங்களை திருடி இருக்கிறார்கள் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டு இருக்கிறார்.

    தற்போது உச்ச நீதிமன்றத்தில் ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கி உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இதை விசாரித்து வருகிறது.

    இதில் மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். முதல் நாளே அவர் ரபேல் தொடர்பாக தி இந்து நாளிதழில் பத்திரிக்கையாளர் என்.ராம் வெளியிட்டு வந்த ஆதாரங்கள் மீது கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

    ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது முக்கிய விசாரணை!ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது முக்கிய விசாரணை!

    ரபேல் ஆதாரம்

    ரபேல் ஆதாரம்

    கேகே வேணுகோபால் தனது வாதத்தில், ரபேல் தொடர்பான முக்கிய ஆதாரங்களை திருடி இருக்கிறார்கள். ரபேல் தொடர்பாக முக்கிய ஆவணங்களை திருடி செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். அரசு ஒப்பந்த ரகசியங்களை தவறுதலாக கசியவிட்டு உள்ளனர்.

    ரபேல் வழக்கு.. முதல் நாளே பரபரப்பு.. நீதிபதிகள் போட்ட அதிரடி ஆர்டர்.. காரசார வாதம்!ரபேல் வழக்கு.. முதல் நாளே பரபரப்பு.. நீதிபதிகள் போட்ட அதிரடி ஆர்டர்.. காரசார வாதம்!

    மனுக்கள்

    மனுக்கள்

    இதை வைத்து தற்போது நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது (பிரஷாந்த் பூஷன் தாக்கல் செய்த மனு). இதை வைத்து தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்ள கூடாது. ஆவணங்களை கசியவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செய்திகளை முதலில் வெளியிட்ட இரண்டு செய்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேசிய பாதுகாப்பு

    தேசிய பாதுகாப்பு

    இது தேசிய பாதுகாப்பு தொடர்பானது. நீதிமன்ற தீர்ப்பை மாற்ற வேண்டும் என்பதற்காக கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். கட்டுரைகள் மூலம் நீதிமன்ற தீர்ப்பில் மாற்றங்களை கொண்டு வர அவர்கள் நினைக்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் நீதிமன்ற அவமதிப்புதான். அதனால் இந்த மனுக்களை ஏற்றுக்கொள்ள கூடாது, என்று அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் குறிப்பிட்டு இருக்கிறார்.

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    முன்னதாக முதலில் தி இந்து நாளிதழ் மூலம் ரபேல் ஆதாரங்களை பத்திரிகையாளர் என்.ராம் வெளியிட்டார். ஆனால் அப்போது மத்திய அரசு, பாதி ஆவணம் மட்டுமே வெளியிட்டு இருக்கிறார்கள் என்றது. இந்த நிலையில் தற்போது ஆவணத்தை திருடிவிட்டதாக கூறியுள்ளனர். ஆனால் அந்த ஆவணங்களில் மத்திய அரசுக்கு எதிராக இருக்கும் தகவல்கள் பொய் என்று எங்குமே மத்திய அரசு இதுவரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சமம்

    சமம்

    இதையடுத்து வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்பது மிரட்டலுக்கு சமம். மனுதாரர்கள் உண்மையை வெளியிட கூடாது என்று அரசு தரப்பு மிரட்டுகிறது. அரசு ஆவணங்களை வெளியிட தகவல் அறிவும் உரிமை சட்டம் அனுமதி அளிக்கிறது.

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    அரசு தரப்பு வழக்கறிஞர் கேகே வேணுகோபால், ஆர்டிஐ மூலம் சாதாரண அரசு தகவல்களை மட்டுமே வெளியிட முடியும். ராணுவ ரகசியங்களை, பாதுகாப்பு தகவல்களை வெளியிட கூடாது, என்று குறிப்பிட்டார்.

    English summary
    Rafale documents were stolen by media, and the court should take action against them says Center Government in Supreme Court hearing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X