டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 கல்லில் 3 மாங்காய்.. செம சந்தோசத்தில் பாஜக தலைகள்.. ஒரே நாளில் அடுத்தடுத்து குட் நியூஸ்

பாஜக கட்சிக்கும் மத்திய அரசுக்கும் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று நல்ல செய்திகள் கிடைத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேல் கொள்முதல் வழக்கு.. மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம்

    டெல்லி: பாஜக கட்சிக்கும் மத்திய அரசுக்கும் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று நல்ல செய்திகள் கிடைத்து இருக்கிறது.

    அயோத்தி வழக்கில் கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. தற்போது ஒரே வார இடைவெளியில் மூன்று வழக்குகளில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் மீதான வழக்கு, ரபேல் வழக்கு, ராகுல் காந்திக்கு எதிரான தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்று மூன்று வழக்கிலும் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஒரே தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகள்.. 2 நீதிபதிகள் எதிர்ப்பு.. அதிரடி காட்டிய சந்திரசூட், நாரிமன்!ஒரே தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகள்.. 2 நீதிபதிகள் எதிர்ப்பு.. அதிரடி காட்டிய சந்திரசூட், நாரிமன்!

    சபரிமலை

    சபரிமலை

    அதன்படி சபரிமலை வழக்கில் முக்கியமான திருப்பம் நிகழ்ந்து இருக்கிறது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்வது தவறு என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை. ஆனால் இந்த வழக்கை 7 நீதிபதிகளின் பெஞ்சிற்கு நீதிபதிகள் மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.

    வழக்கில் ஒரு வகையில் வெற்றி

    வழக்கில் ஒரு வகையில் வெற்றி

    அதனால் சபரிமலை வழக்கின் மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் நடக்கும். இது ஒரு வகையில் கேரளா பாஜகவிற்கு வெற்றி என்று கூறப்படுகிறது. மீண்டும் வழக்கில் விசாரணை நடப்பதால் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். இது பாஜகவிற்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

    ராகுல் வழக்கு

    ராகுல் வழக்கு

    பிரதமர் மோடியை திருடர் என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வைத்த கருத்திற்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நீதிமன்றம் கண்டிப்பு

    நீதிமன்றம் கண்டிப்பு

    இது பாஜக கட்சிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பெரிய கட்சியில் முக்கிய தலைவராக இருப்பவர் கவனமாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதை வைத்து இப்போதே பாஜகவினர் ராகுல் காந்தியை விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.

    ரபேல் ஒப்பந்தம்

    ரபேல் ஒப்பந்தம்

    அதேபோல் மிக முக்கியமாக ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கின் மறுசீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் எந்த தவறும் நிகழவில்லை, அதனால் எப்ஐஆர் அவசியமில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். ரபேல் வழக்கில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை இல்லை, என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

     மூன்று விஷயம்

    மூன்று விஷயம்

    இப்படி ஒரே நாளில் மூன்று விஷயங்களில் பாஜக மகிழ்ச்சி அடையும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அயோத்தி வழக்கில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதுவும் பாஜகவிற்கு பெரிய மகிழ்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Rafale verdict and Sabarimala Verdict gave huge happiness to the BJP party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X