டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லீக்கான ஆதாரங்கள் எல்லாம் வேஸ்ட்.. எந்த பயனும் இல்லை.. ரபேலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம்!

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கசிந்த ஆதாரங்கள் எதுவுமே இந்த வழக்கில் எந்த விதமான திருப்பத்தை ஏற்படுத்தவில்லை.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேல் கொள்முதல் வழக்கு.. மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம்

    டெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கசிந்த ஆதாரங்கள் எதுவுமே இந்த வழக்கில் எந்த விதமான திருப்பத்தை ஏற்படுத்தவில்லை. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கசிந்த ஆதாரங்கள் எல்லாம் அர்த்தமற்று போய் இருக்கிறது.

    பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ரபேல் மறுசீராய்வு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரபேல் வழக்கில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை இல்லை, யார் மீதும் எப்ஐஆர் பதிய வேண்டியது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த ரபேல் வழக்கில் தி இந்து பத்திரிக்கையில் என் ராம் வெளியிட்ட ஆதாரங்கள் மிக முக்கிய பங்கு வகித்தது. இதை வைத்துதான் மறுசீராய்வு மனுக்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    பாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்!பாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்!

    என்ன ஆதாரம்

    என்ன ஆதாரம்

    தி இந்து நாளிதழில் வெளியான ஆதாரங்களின்படி, ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது. ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய ஒப்பந்த குழுவின் பேச்சுவார்த்தை மட்டுப்படுத்தப்பட்டது. பிரதமர் அலுவலகத்தின் பேச்சுவார்த்தைக்கு இந்திய குழுவே எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பான கடித பரிவர்த்தனை ஆதாரங்களை வெளியிட்டது.

    முக்கியம்

    முக்கியம்

    அதேபோல் ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக ஒப்பந்த விதிகளை தளர்த்தியது. ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கு, பிரான்ஸ் அரசு எந்த விதமான வங்கி உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதனால் ரபேல் ஒப்பந்தத்தில் திட்டமிடப்பத்தை விட இந்தியாவிற்கு அதிக செலவு ஏற்பட்டு உள்ளது என்பது குறித்த ஆதாரங்களை வெளியிட்டது.

    உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது

    உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது

    சிஏஜி அறிக்கையில் தவறான தகவல்கள் உள்ளது குறித்த ஆதாரம். கணக்குகள் தவறு என்றும் ஆதாரங்கள் வெளியிடப்பட்டது. இதை வைத்து மறுசீராய்வு விசாரணை பரபரப்பாக சென்றது. இந்த ஆதாரங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இது மத்திய அரசுக்கு பெரிய தலைவலியாக மாறும் என்று எல்லோரும் கருதினார்கள்.

    தவிடுபொடி

    தவிடுபொடி

    இது தொடர்பாக நிறைய கடிதங்கள் எல்லாம் வெளியானது. ஆனால் எல்லா கருத்தையும் தவிடு பொடியாக்கி இருக்கிறது இன்று வெளியான மறுசீராய்வு தீர்ப்பு. அதன்படி ரபேல் வழக்கில் யாரையும் விசாரிக்க வேண்டியது இல்லை. இதில் குற்றம் நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

    அர்த்தம் இல்லை

    அர்த்தம் இல்லை

    இதனால் ரபேலில் வெளியான ஆதாரங்கள் எல்லாம் அர்த்தமற்று போய் உள்ளது. இந்த ஆதாரங்களை காங்கிரஸ் மலைபோல நம்பி இருந்தது. இணையத்தில் இந்த ஆதாரங்கள் பெரிய வைரலானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Rafale verdict: Leaked document didn't play any role in the judgment today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X