டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீக்கியர் படுகொலை- சாம் பிட்ரோடாவின் அலட்சிய பதில்... ஆவேசமான ராகுல்- மன்னிப்பு கேட்க ‘உத்தரவு’!

Google Oneindia Tamil News

டெல்லி: 1984-ல் சீக்கியர்கள் படுகொலை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சாம் பிட்ரோடா அலட்சியமாக தெரிவித்த பதிலால் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமடைந்துள்ளார். மேலும் சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்கவும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

லோக்சபா தேர்தல் களம் என்பது 1980களை மையப்படுத்தி அனல் பறக்கிறது. 1980களில் கொடிகட்டிப் பறந்த சர்ச்சைகள் இப்போதைய தேர்தல் களத்தில் அனலை கக்குக்கின்றன.

Rahul asks Sam Pitroda to apologise for remark on 1984 anti-Sikh riots

இதில் சீக்கியர்கள் படுகொலை விவகாரமும். இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் 7,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பிரதமராக இருந்த ராஜீவ்தான் பொறுப்பு என பாஜக உள்ளிட்டவை விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான சாம்பிட்ரோடா செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் சீக்கியர்கள் படுகொலை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அது நடந்து முடிந்துவிட்டது.. இப்போது அதற்கு என்ன செய்ய முடியும்? என அலட்சியமாக பதில் அளித்திருந்தார்.

 தாயில்லாமல் நானில்லை.. தானே எவரும் பிறந்ததில்லை.. ஹூஸ்டனில் அன்னையர் தின கொண்டாட்டம் தாயில்லாமல் நானில்லை.. தானே எவரும் பிறந்ததில்லை.. ஹூஸ்டனில் அன்னையர் தின கொண்டாட்டம்

இதையும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டு காங்கிரஸ் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். சாம்பிட்ரோடாவின் கருத்தால் ஆவேசமடைந்த ராகுல் காந்தி தமது ஃபேஸ்புக் பக்கத்தில், அவர் தெரிவித்த கருத்து ஏற்புடையது அல்ல. நிச்சயம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் சீக்கியர்கள் படுகொலை தொடர்பாக நாங்கள் ஏற்கனவே விரிவாக விளக்கம் தந்துவிட்டோம். அப்படுகொலையில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவுமே இல்லை என்றும் ராகுல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

English summary
Congress president Rahul Gandhi asked his party Overseas Congress chief Sam Pitroda to apologise for his remarks on 1984 anti-Sikh riots.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X