டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முன்னேற்றமே இல்லாத 100 நாட்கள்.. நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகள்.. கிண்டல் செய்த ராகுல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Modi 2.0 government : achievements list out on septemper 7

    டெல்லி: பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆன நிலையில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லாததற்கு பாராட்டுகள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தது. கடந்த 5 ஆண்டுகளில் மோடி அறிவித்த திட்டங்கள் அனைத்தும் மக்கள் விரோத திட்டங்கள் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    Rahul congratulated Narendra Modi government for no development

    இதை வைத்தே கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் மக்கள் விரோத திட்டங்கள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன. ஆனால் இரண்டாவது முறையாக பாஜகவே ஆட்சிக்கு வந்தது.

    இந்த நிலையில் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆனதை அடுத்து 100 நாட்களில் மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்கள் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாட்டின் எம்பியுமான ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் முன்னேற்றமில்லாமல் 100 நாட்களை கொண்டாடும் மோடிக்கு எனது வாழ்த்துகள்.

    விமர்சனத்தை மூழ்கடிக்கும் விதமாக ஊடகங்களின் கழுத்தை நெரித்தல், பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு வருவதற்கான திட்டங்கள், வழிகாட்டுதல்கள், தலைமை பண்பு ஆகியவற்றில் குறைபாடு ஆகியவைதான் மோடி அரசின் சாதனைகள். வழிகாட்டுதல்கள், திட்டங்கள்தான் சேதமடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த தேவைப்படுகிறது என்றார் ராகுல்.

    English summary
    Rahul Gandhi says in twitter that Congratulations to the Modi Govt on #100DaysNoVikas, the continued subversion of democracy, a firmer stranglehold on a submissive media to drown out criticism and a glaring lack of leadership, direction & plans where it’s needed the most - to turnaround our ravaged economy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X