டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரஸ் தலைவராக ராகுல் நீடிப்பார்.. காங். காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவை.

    டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    நாடாளுமன்ற தேர்தலை ராகுல் தலைமையில் சந்தித்த காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்க அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே பஞ்சாப் மாநில முதல்வர் அமிரீந்தர் சிங், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டு முயற்சியே எந்த வெற்றிக்கும் வழி வகுக்கும்.. பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி கூட்டு முயற்சியே எந்த வெற்றிக்கும் வழி வகுக்கும்.. பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி

    புறக்கணித்த கமல்நாத்

    புறக்கணித்த கமல்நாத்

    ஆனால் மத்திய பிரதேச முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கமல்நாத் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

    ஏற்க மறுப்பு

    ஏற்க மறுப்பு

    இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த ராகுல் காந்தி அதற்கான ராஜினாமா கடிதத்தையும் கொடுத்தார். ஆனால் அவரது ராஜினாமாவை செயற்குழு உறுப்பினர்கள் ஏற்கவில்லை.

    தீர்மானம் நிறைவேற்றம்

    தீர்மானம் நிறைவேற்றம்

    இருப்பினும் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுவதில் உறுதியாக இருந்தார் ராகுல். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரமும் ராகுல்காந்திக்கு வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தென்மாநிலம் ஆதரவு

    தென்மாநிலம் ஆதரவு

    இதனிடையே காங்கிரஸ் தோல்விக்கு ராகுலின் தலைமைதான் காரணம் என வட மாநில நிர்வாகிகள் கூறியதாக தெரிகிறது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் ராகுல்தான் நீடிக்க வேண்டும் என தென் மாநில நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

    English summary
    The resolution was passed at Congress Working Committee meeting that Rahul Gandhi will be the leader of the Congress party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X