டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுல் தலைமையை நிராகரித்த மக்கள்.. காங்கிரஸுக்கு புது தலைவர் தேவை!

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தியின் தலைமையை பொதுமக்கள் நிராகரித்துவிட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேவை என்கிற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி அக்கட்சியின் தலைவரானார்.

பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து, பொதுமக்களுடன் இயல்பாக உரையாடுவது என தமது ஆளுமையை செதுக்கிக் கொள்ள ராகுல் முயற்சித்தார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வென்ற போது ராகுலின் வெற்றியாக கொண்டாடப்பட்டது.

அமமுகவுக்கு பெரம்பூரில் கிடைத்த பேரதிர்ச்சி.. வெற்றிவேலை வீழ்த்திய மநீம, நாம் தமிழர்! அமமுகவுக்கு பெரம்பூரில் கிடைத்த பேரதிர்ச்சி.. வெற்றிவேலை வீழ்த்திய மநீம, நாம் தமிழர்!

களத்தில் பிரியங்கா

களத்தில் பிரியங்கா

ஆனால் அம்மாநிலங்களில் ஆண்ட பாஜக அரசுகள் மீதான அதிருப்தியால்தான் காங்கிரஸ் வென்றது என்பது கள நிலவரம். ராகுலைத் தொடர்ந்து அவரது சகோதரி பிரியங்காவும் பொதுச்செயலர் பதவியுடன் அரசியலுக்கு வந்தார்.

பறிபோன எதிர்க்கட்சி அந்தஸ்து

பறிபோன எதிர்க்கட்சி அந்தஸ்து

கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் 8 தொகுதிகள்தான் அதிகம். இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரஸுக்கு கிடைக்கப் போவது இல்லை. காங்கிரஸைப் பொறுத்தவரை இன்னமும் பெரியண்ணன் மனப்பான்மையில் இருந்து இறங்கி வர மறுக்கிறது.

ஜஸ்ட் மிஸ் ஆகி மாஸ் வெற்றி பெற்ற பாரிவேந்தர்.. கடைசி நேர அதிரடியால் எம்.பி. ஆன அதிசயம்! ஜஸ்ட் மிஸ் ஆகி மாஸ் வெற்றி பெற்ற பாரிவேந்தர்.. கடைசி நேர அதிரடியால் எம்.பி. ஆன அதிசயம்!

ஸ்டாலின் பாணிதான் தேவை

ஸ்டாலின் பாணிதான் தேவை

தமிழகத்தில் திமுக, மதவாத எதிர்ப்பு கட்சிகளை ஒருங்கிணைத்து வலிமையான கூட்டணியை உருவாக்கி அமோக வெற்றியை அறுவடை செய்தது. தேசிய அளவில் அப்படியான ஒரு கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முயற்சிக்கவில்லை. ராகுல் காந்திக்கும் அத்தகைய வலிமை இல்லை.

ராகுலுக்கு ஆளுமை இல்லை

ராகுலுக்கு ஆளுமை இல்லை

இத்தனைக்கும் மாநில கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸுடன் இணைந்து செயல்படவும் தயாராக இருந்தனர். உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ்- மாயாவதியுடன் கை கோர்த்து செயல்பட்டிருந்தால் நிலைமை வேறாகவும் மாறி இருக்கலாம். அதேபோல் டெல்லியில் ஆம் ஆத்மியுடன் இணைந்து செயல்பட முன்வந்திருக்கலாம். நாடு முழுவதும் மதவாத எதிர்ப்பு சக்திகளை ஒருங்கிணைத்து பாஜகவை வீழ்த்த வலிமையான கூட்டணியை உருவாக்கியிருந்தால் பாஜகவின் பாய்ச்சலுக்கு வேலி போட்டிருக்கலாம். இவற்றை செய்ய விருப்பம் கொண்டவராக ராகுல் இருந்தாலும் அதற்கான ஆளுமை அவருக்கு இல்லை என்பதுதான் யதார்த்தம்.

அவங்களும் வேணாம்.. இவங்களும் வேணாம்.. புதுசா இருந்தாலும்.. இவரே போதும்.. பலே மதுரை மக்கள்! அவங்களும் வேணாம்.. இவங்களும் வேணாம்.. புதுசா இருந்தாலும்.. இவரே போதும்.. பலே மதுரை மக்கள்!

புதிய தலைவர் தேவை

புதிய தலைவர் தேவை

மாநில கட்சி அளவுக்கு காங்கிரஸ் சுருங்கிப் போய்விட்டது. தேசிய அளவில் பாஜக என்கிற ஒற்றை கட்சிதான் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இடதுசாரிகளைப் போல காங்கிரஸும் பல மாநிலங்களில் இருந்து துடைத்து எறியப்பட்டு இருக்கிறது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் இன்னமும் குறைவான இடங்களைத்தான் பெறும் நிலை உருவாகலாம். அப்படியான ஒரு மரண நிலைக்கு ஆகப் பெரும் காங்கிரஸ் கட்சி செல்வதற்கு முன்னர் புது ரத்தம் பாய்ச்சும் வகையில் புதிய தலைவர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வலிமை மிக்க, அனைத்து பாஜக எதிர்ப்பு சக்திகளை ஒருங்கிணைக் கூடிய, இந்துத்துவா சிந்தனையை வெளிப்படையாக பகிரங்கமாக விமர்சிக்கக் கூடிய ஒரு தலைவர்தான் காங்கிரஸுக்கு இப்போதைய தேவை.

English summary
Political leaders said that Congress president Rahul Gandhi has failed to lead fight against BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X