டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக்கும்.. இது 'விவசாயிகளுக்கு எதிரான மரண உத்தரவு'.. ராகுல் காந்தி

Google Oneindia Tamil News

டெல்லி: இரண்டு விவசாய துறை சீர்திருத்த மசோதாக்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நரேந்திர மோடி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார்., "விவசாயிகளுக்கு எதிரான மரண உத்தரவு" என்று இந்த மசோதாவை குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெரும் அமளிக்கு மத்தியில், ராஜ்யசபாவில் இன்று விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா உடன்பாடு-2020 மசோதா நிறைவேற்றியது. முன்னதாக வியாழக்கிழமை அன்று லோக்சபாவிலும் நிறைவேறியது. இதை சட்டமாக்க குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,

மத்திய அரசு "ராஜ்யசபாவில் விவசாயிகளுக்கு எதிராக மரண உத்தரவுகளை பிறப்பத்துள்ளதாகவும்" ஜனநாயகத்திற்கு வெட்ககேடாது என்றும் ராகுல் காந்தி கடுமையான கருத்துக்களை ட்வீட்டில் கூறினார்.

வெற்று வாக்குறுதியை நம்ப, விவசாயிகளை மிகவும் முட்டாள்கள் என அரசு நினைக்கிறதா? ப சிதம்பரம்வெற்று வாக்குறுதியை நம்ப, விவசாயிகளை மிகவும் முட்டாள்கள் என அரசு நினைக்கிறதா? ப சிதம்பரம்

வெட்கக்கேடானது

வெட்கக்கேடானது

இது தொடர்பாக அவர் தனது ட்வீட்டில். "பூமியிலிருந்து தங்கத்தை வளர்க்கும் விவசாயி, மோடி அரசாங்கத்தின் பெருமை அவர்களை அழ வைக்கிறது. வேளாண் மசோதா என்ற பெயரில் இன்று ராஜ்யசபாவில் விவசாயிகளுக்கு எதிராக அரசாங்கம் மரண உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு வெட்கக்கேடானது," என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அடிமைகளாக்க உதவும்

அடிமைகளாக்க உதவும்

முன்னதாக, ராகுல் காந்தி மத்திய அரசின் விவசா மசோதாவை 'மோடி அரசாங்கத்தின் விவசாய எதிர்ப்பு கருப்பு சட்டம்' என்று குறிப்பிட்டார். விவசாயம் தொடர்பான மசோதாக்களைக் கொண்டுவருவதன் மூலம் "விவசாயிகள் சிறைப்பிடிக்கப்பட்டவர்களின் அடிமைகளாக இருக்க" பிரதமர் நரேந்திர மோடி அனுமதித்திருக்கிறார் என்று அவர் குற்றம் சாட்டினார். "மோடி அரசாங்கத்தின் விவசாய எதிர்ப்பு 'கருப்பு சட்டம்' மூலம், விவசாயிகள்: 1. உற்பத்தி சந்தைக் குழுக்களில் எவ்வாறு விவசாய பொருட்கள் பெறப்படும்? 2. குறைந்தபட் ஆதரவு விலைக்கு ஏன் உத்தரவாதம் இல்லை? மோடி ஜி விவசாயிகளை அடிமைகளாக ஆக்குகிறார் முதலாளிகளால் நாடு ஒருபோதும் வெற்றிபெற விடாது. # விவசாய விரோதி நரேந்திரமோடி, இவ்வாறு ராகுல் காந்தி மற்றொரு ட்வீட்டில் கூறினார்.

பாஜக நிராகரிப்பு

பாஜக நிராகரிப்பு

இந்நிலையில இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராஜ்யசபாவில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி விவசாயிகளின் "மரண உத்தரவில்" கையெழுத்திடப் போவதில்லை என்று கூறி விவசாய மசோதாக்களை விமர்சித்ததுடன், அவற்றை ஆய்வுக்கு தேர்வுக் குழுவிற்கு அனுப்புமாறு கோரியது, அதே நேரத்தில் ஆளும் பாஜக எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாக குற்றம் சாட்டியது விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாகவும் கூறியது..

மசோதா நிறைவேற்றம்

மசோதா நிறைவேற்றம்

இதற்கிடையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பிற பாஜக மூத்த தலைவர்கள், ராஜ்யசபாபில் விவசயாம் தொடர்பாக நிறைவேறிய இரண்டு மசோதாக்களைப் பாராட்டினர், இது விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும், இடைத்தரகர்களிடமிருந்து விடுபடுவதற்கும் சுதந்திரம் அளிக்கும் என்று புகழ்ந்தனர்.
மசோதாக்களைப் பாராட்டிய ஜேபி நட்டா, இந்த மசோதாக்களின் கீழ் விவசாயிகள் மேலும் மேலும் சிறந்த விருப்பங்களைப் பெறுகிறார்கள் என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) மற்றும் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்கள் (ஏ.பி.எம்.சி) தொடரும் என்றும் கூறினார்.

English summary
congress leader Rahul Gandhi on Sunday lashed out at the Narendra Modi government for Parliament's nod to two farm sector reform bills and termed it "death orders against farmers".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X