டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகன்களுக்கு சீட் கேட்டு மூத்த தலைவர்கள் தொல்லை.. இப்படியிருந்தால் எப்படி? ராகுல் பகீர் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

டெல்லி: மகன்களுக்கு சீட் கேட்டு மூத்த தலைவர்கள் தொல்லை கொடுத்தனர் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மொத்தம் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மனு கொடுத்தார்.

ஆனால் இதை செயற்குழு உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தநிலையில் நேற்றைய தினம் டெல்லியில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

திமுக அணியின் பலம் குறைகிறது... நாங்குநேரியில் விரைவில் இடைத்தேர்தல் திமுக அணியின் பலம் குறைகிறது... நாங்குநேரியில் விரைவில் இடைத்தேர்தல்

மக்கள்

மக்கள்

அப்போது அவர் பேசுகையில் பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரச்சார யுத்திகளை கீழ் மட்ட தலைவர்கள் கையாளவில்லை. நிறைய விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை.

போட்டியிட

போட்டியிட

காங்கிரல் ஆளும் மாநிலங்களில் கூட பிராச்சாரம் சரியில்லை. மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் தனது மகன்களுக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு நச்சரித்தனர்.

தலைவர்கள்

தலைவர்கள்

நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதை ஏற்க மறுத்தார்கள். இது போன்ற பிடிவாதமாக இருந்தால் கட்சியை எப்படி நடத்துவது. கட்சிக்கு யார் வேண்டுமானாலும் தலைவராக இருக்கட்டும். நாங்கள் மட்டும்தான் தொடர்ந்து தலைவர்களாக இருக்க வேண்டுமா? என்றார் ராகுல்காந்தி.

சமாதானம்

சமாதானம்

இது போல் ராகுல் ஆதங்கப்பட்டு பேசினார். இதையடுத்து அவரை மூத்த தலைவர்களான ப. சிதம்பரம், ஏகே அந்தோணி, அகமது பட்டேல் ஆகியோர் சமாதானப்படுத்தினர்.

English summary
Rahul Gandhi accuses Senior leaders asked seat for their sons though party is not putting interest for their query.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X