டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புல்வாமா தாக்குதலால் ஆதாயம் அடைந்தது யார்? விசாரணை என்னாச்சு.. ராகுல் நறுக் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    புல்வாமா தாக்குதல்... இன்னமும் விடை தெரியலையே..

    டெல்லி: புல்வாமா தாக்குதலால் ஆதாயம் அடைந்தது யார்? தாக்குதல் குறித்த விசாரணை என்னவானது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஜம்மு- காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராணுவ வாகனங்களில் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வாகனங்களின் மீது காரில் வந்த தற்கொலை படை தாக்குதல் தீவிரவாதி வெடிகுண்டை வீசினான்.

    இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

     ஆம் ஆத்மி ஸ்டைல் அறிவிப்பு.. கெஜ்ரிவாலை பின்பற்றி ஓ.பி.எஸ் கொண்டு வரும் சூப்பர் திட்டம்.. செம! ஆம் ஆத்மி ஸ்டைல் அறிவிப்பு.. கெஜ்ரிவாலை பின்பற்றி ஓ.பி.எஸ் கொண்டு வரும் சூப்பர் திட்டம்.. செம!

    தாக்குதல்

    தாக்குதல்

    இதையடுத்து 40 பேரின் விலை மதிப்பில்லா உயிர்களுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் திடீரென இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தீவிரவாதிகள் பலர் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் நிலைகுலைந்தது.

    இந்தியா

    இந்தியா

    இதற்கு பதிலாக பாகிஸ்தானும் இந்தியாவை தாக்க வான் வழியே வந்தது. அப்போது அந்த விமானங்களை இந்திய வீரர்கள் விரட்டி அடித்தனர். அது போல் ஒரு விமானத்தை துரத்தி சென்று விரட்டும் போது எதிர்பாராத விதமாக பாதுகாப்பு கருதி கீழே குதித்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் சிக்கி பின்னர் இந்தியாவின் கடும் முயற்சிக்கு பின்னர் மீட்கப்பட்டார்.

    நினைவு தினம்

    நினைவு தினம்

    இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. புல்வாமா தாக்குதல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி ராகுல் காந்தி, மத்திய அரசுக்கு 3 கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் தனது ட்விட்டரில் இன்று 40 வீரர்களின் உயிரை குடித்த புல்வாமா தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

    என்ன கேள்விகள்

    மத்திய அரசு எனது 3 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். முதல் கேள்வி இந்த புல்வாமா தாக்குதலால் ஆதாயம் அடைந்தது யார்?, இந்த தாக்குதல் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவுகள் என்ன? பாதுகாப்பு குறைப்பாடுகளால் நடந்த இந்த தாக்குதலுக்கு பாஜக அரசில் இருந்து யார் பொறுப்பேற்றது? என 3 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    English summary
    Congress EX President Rahul Gandhi says in his twitter page that Today as we remember our 40 CRPF martyrs in the #PulwamaAttack and asked 3 questions to Centre.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X