டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி அரசு இந்தியா ராணுவத்துடனா...இல்லை சீனாவுடன் இருக்கிறதா...ராகுல் காந்தி கேள்வி!!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது இந்திய ராணுவத்துடன் மோடி அரசு இருக்கிறதா அல்லது சீனாவுடன் இருக்கிறதா? இதை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது என்று பதிவு செய்துள்ளார்.

எல்லையில் இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது என்று ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். எப்போது இழந்த நிலப்பகுதியை மோடி அரசு மீட்கப்போகிறது என்று கேள்வி எழுப்பி வந்தார். இந்த நிலையில் மீண்டும் இன்று ட்வீட் மூலம், ''இந்திய ராணுவத்துடன் மோடி அரசு இருக்கிறதா அல்லது சீனாவுடன் இருக்கிறதா? இதை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது'' என்று பதிவு செய்துள்ளார்.

மந்த நிலையில் இந்திய பொருளாதாரம்.. 12.66% குறைந்த ஏற்றுமதி.. இறக்குமதியும் மளமள சரிவு மந்த நிலையில் இந்திய பொருளாதாரம்.. 12.66% குறைந்த ஏற்றுமதி.. இறக்குமதியும் மளமள சரிவு

இந்திய எல்லை

இந்திய எல்லை

முன்பு இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இதையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது என்று கூறினார். இதைத் தொடர்ந்து இன்று விளக்கம் அளித்து இருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம், ''இந்திய எல்லைக்குள் கடந்த ஆறு மாதங்களில் சீனாவில் இருந்து எந்த ஊடுருவலும் இல்லை'' என்று தெரிவித்துள்ளது.

சீனாவில் கடன்

சீனாவில் கடன்

எல்லையில் ஊடுருவவில்லை என்று பிரதமர் மோடி கூறிக்கொண்டே சீனா வங்கியில் பெரிய அளவில் கடன் பெற்றுள்ளார். ஆனால், மறுபக்கம் ஊடுருவல் இல்லை ஆக்கிரமிப்பு இல்லை என்று கூறிவருகிறார்.

உள்துறை அமைச்சகம்

உள்துறை அமைச்சகம்

எல்லையில் கிழக்கு லடாக் பகுதியில் இருக்கும் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனா தனது எல்லையை மாற்றி அமைக்கும் வகையில் சாதகமாக, இந்தியாவுக்குள் கடந்த ஆறு மாதங்களில் சீனாவில் இருந்து ஊடுருவல் இல்லை என்று ராஜ்ய சபாவில் உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.

நடவடிக்கை என்ன

நடவடிக்கை என்ன

இன்று ராஜ்ய சபாவில் இதுதொடர்பான கேள்வியை பாஜக எம்பி அனில் அகர்வால் எழுப்பி இருந்தார். ''கடந்த ஆறு மாதங்களில் இந்திய எல்லைக்குள் ஊடுருவல் இருந்ததா, மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது'' என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுத்துபூர்வமான பதிலை அளித்து இருந்தது.

ஊடுருவல்

ஊடுருவல்

இதற்கு பதில் அளித்து இருந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய், ''பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்தியாவுக்குள் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகளவில் ஊடுருவல் இருந்தது. ஆனால், சீனா தரப்பில் இருந்து இந்தியாவுக்குள் கடந்த ஆறு மாதத்தில் எந்த ஊடுருவலும் இல்லை'' என்று தெரிவித்து இருந்தார்.

துப்பாக்கி சூடு

துப்பாக்கி சூடு

அதேசமயம் இந்திய, சீன எல்லையில் பாங்கோங் திசோ பகுதியில் கடந்த செப்டம்பர் மாத துவக்கத்தில் இருதரப்பு ராணுவத்தினரும் எச்சரிக்கையாக 100 முதல் 200 முறை துப்பாக்கியால் சுட்டனர் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பாங்கோங் திசோ பகுதியில் இருக்கும் பிங்கர் 3 மற்றும் 4 ஆகிய நிலைகள் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாஸ்கோவில் சீன வெளியுறவுத்துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பதற்கு முன்பு எச்சரிக்கையாக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Rahul Gandhi attacks central govt; questions Modi govt is with China or Indian Army?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X