டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெருப்பில்லாமல் புகையுமா.. ராகுல் காந்திக்கு எதிராக கொந்தளித்து கூலான சீனியர்கள்.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கட்சி மூத்த தலைவர்கள் மற்றும் ராகுல் காந்தி இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது என்னவோ உண்மைதான். பல்டியடித்தாலும் இதை மறுக்க முடியாது என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.

Recommended Video

    Congress செயற்குழு கூட்டம்.. முடிவுக்கு வருமா குழப்பம்?

    காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த ராகுல் காந்தி கடந்த லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து பதவி விலகினார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்புக்கு வந்தார்.

    வயது முதிர்வு மற்றும் உடல்நல உபாதைகளால் அவதிப்படும் சோனியாகாந்தி வேறு வழியின்றிதான் இந்த பொறுப்பை நிர்வகிக்க வேண்டிய வந்ததாக கூறப்படுகிறது.

    என்னது தாவூத் இப்ராஹிமுடன் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கா? ஷேர் செய்யப்படும் பொய் தகவல்என்னது தாவூத் இப்ராஹிமுடன் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கா? ஷேர் செய்யப்படும் பொய் தகவல்

    கடிதம்

    கடிதம்

    இந்த நிலையில்தான், காங்கிரஸ் எம்பிக்கள் முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 23 மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில், காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர மற்றும் களத்தில் பணியாற்ற கூடிய அளவுக்கான ஒரு தலைவர் தேவை என்ற கருத்தை அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இந்த நிலையில்தான் இடைக்கால தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சோனியாகாந்தி அறிவித்துள்ளார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இன்று நடைபெறுகிறது.

    நேரடி குற்றச்சாட்டு

    நேரடி குற்றச்சாட்டு

    இதில் சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் செயற்குழவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின்போது பேசிய ராகுல் காந்தி நேரடியாக சீனியர் தலைவர்களை குற்றஞ்சாட்டும் வகையில் கருத்துக்களை அதிரடியாக வெளியிட்டதாக தகவல் வெளியானது. காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கும் நிலையில் காங்கிரஸை விமர்சனம் செய்வது மாதிரி ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    சோனியா மன வேதனை

    சோனியா மன வேதனை

    ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அரசியல் ஸ்திரத்தன்மையை இழந்து காங்கிரஸ் போராடும் நிலையில் மற்றும் சோனியா காந்தி உடல் நல குறைவால் அவதிப்படும் நிலையில் இதுபோன்ற கடிதம் எழுதப்பட்டுள்ளது. யாருக்காக இது செய்யப்பட்டது? இந்த கடிதம் எனது தாயை மிகவும் மன வேதனை அடையச் செய்துள்ளது. இந்தக் கடிதம் துரதிஷ்டவசமானது. கட்சியின் தலைமையை பலவீனப்படுத்துவது கட்சியை பலப்படுத்துவதற்கு சமம்.

    பாஜகவுடன் கூட்டு

    பாஜகவுடன் கூட்டு

    பாஜகவுடன் கை கோர்த்துக்கொண்டு இப்படி செய்து கட்சியை பலவீனப்படுத்த விரும்பியுள்ளனர். இவ்வாறு ராகுல் காந்தி பேசியதாக தகவல் வெளியானது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கேக.அந்தோணியும் இந்த கடிதத்தை கண்டித்துள்ளனர். கடிதம் எழுதியது என்பதை விட, அந்த கடிதத்தில் உள்ள அம்சங்கள் மிகவும் மோசமான வகையில் உள்ளன. சோனியாகாந்தி இந்த கட்சிக்காக எத்தனை தியாகங்களை செய்தார் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    குலாம் நபி ஆசாத் கோபம்

    குலாம் நபி ஆசாத் கோபம்

    இந்த நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி தெரிவித்தனர்.. சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமான மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ராகுல்காந்தியின் இந்த பேச்சால் அதிர்ச்சி அடைந்துள்ளார். பாஜகவுடன் கைகோர்த்து விட்டதாக கூறியதை ராகுல் காந்தி நிரூபித்தால், நான் பதவி விலக தயார் என்று செயற்குழு கூட்டத்தில் அவர் ஆவேசமாக பேசியுள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால் பிறகு இந்த தகவலை மறுத்தார். இதேபோல கபில்சிபல் ட்விட்டர் பக்கத்தில், 30 ஆண்டு காலமாக பாஜகவுக்கு ஆதரவாக ஒரு கருத்து கூட கூறியது கிடையாது, என்று தெரிவித்தார். பிறகு இந்த ட்வீட்டை டெலிட் செய்தார். பாஜகவோடு காங்கிரஸ் சீனியர்கள் கூட்டு வைத்து கடிதம் எழுதியதாக ராகுல் காந்தி கடிதம் எழுதவில்லை என கோரசாக கூறுகிறார்கள் இப்போது இந்த தலைவர்கள். ஆனால் ட்வீட் போட்ட கபில் சிபல், ராகுல், சோனியா காந்தி ஆகியோருடன் அதே வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் ஒன்றாக பங்கேற்றவர்தான். ராகுல் காந்தி அப்படி கூறாமல் ஏன் இப்படி ஒரு ட்வீட்டை கபில் சிபல் வெளியிட்டார்? இதை வைத்து பார்த்தால், காங்கிரசில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதை பூசி மறைத்தாலும், அது நீருபூத்த நெருப்பாக இருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

    English summary
    Rahul Gandhi charges t centres have linked with BJP but the Congress senior leaders upset with his remark especially Ghulam Nabi Azad and Kapil sibal openly criticizing Rahul Gandhi's charge against them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X