டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரஸ் கான்பிரன்ஸை விடுங்க.. பூத் நிர்வாகிகளின் கூட்டத்தையே நடத்த முடியாத மோடிஜி!.. ராகுல் கிண்டல்!!

Google Oneindia Tamil News

டெல்லி: வாக்குச் சாவடி நிர்வாகிகளின் கூட்டத்தையே மோடியால் நடத்த முடியவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 15 நாடாளுமன்றத் தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியில் தோன்றி தமிழக பாஜகவினருடன் ஆலோசனை நடத்தும் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் பாஜக நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. புதுவையில் நடந்த கூட்டத்தில் பாஜக நிர்வாகி நிர்மல் குமார் ஜெயின் என்பவர் நடுத்தர வர்க்கத்தினரிடம் வரியை மட்டுமே வசூல் செய்கிறீர்கள்.

கூட்டத்தை முடித்த மோடி

கூட்டத்தை முடித்த மோடி

வரியை வசூலிப்பதில் காட்டும் அக்கறையை நடுத்தர வர்க்கத்தினரின் நலன்களில் இல்லை என மோடியை எதிர்த்து கேள்வி கேட்டார். அதற்கு மோடியோ நேரடியாக எந்த பதிலையும் அளிக்காமல் வணக்கம் புதுச்சேரி என்று கூறி அந்த கூட்டத்தை முடித்தார்.

டுவீட்

டுவீட்

இது சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் புதுச்சேரி கோ வணக்கம் என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கிண்டல் செய்து ஒரு டுவீட் போட்டுள்ளார்.

முடியவில்லை

அந்த டுவிட்டரில் அவர் கூறுகையில், வணக்கம் புதுச்சேரி. போராடும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இதுதான் மோடியின் பதில். செய்தியாளர்கள் கூட்டம் இருக்கட்டும், ஒரு பூத் நிர்வாகிகளின் கூட்டத்தை கூட இவரால் நடத்த முடியவில்லையே.

கிண்டல்

கிண்டல்

கேள்விகளை முன் கூட்டியே ஆய்வு செய்தது பாஜகவின் நல்ல ஐடியா. அது போல் அதற்குரிய பதில்களையும் ஆய்வு செய்வதை பாஜக யோசனை செய்ய வேண்டும் என ராகுல் கிண்டல் செய்துள்ளார்.

English summary
Congress President Rahul Gandhi condemns PM Narendra Modi that Vanakam Puducherry! That’s NoMo’s answer to the struggling middle class.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X