For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வயநாடு தொகுதியில்... கடைசி நாளில் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல்

Google Oneindia Tamil News

கொச்சி: கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான ஏப்ரல் 4 ம்தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எப்போதுமே உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் தான் போட்டியிடுவார். இந்த முறை தென் மாநில வாக்குகளை குறிவைத்து கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட உள்ளார்.

Rahul gandhi filled election nomination in wayanad on april 4

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான உடனேயே கேரள மாநில காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள். ராகுல் காந்தியை வயநாட்டில் போட்டியிட வலியுறுத்தி போஸ்டர்கள், கட் அவுட்களை போட்டு திக்குமுக்காட வைத்த தொண்டர்களை, போட்டியிடுவதாக அறிவித்து மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளார் ராகுல் காந்தி.

அதிமுக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் உள்பட 3 பேர் நீக்கம்: ஒபிஎஸ் -ஈபிஎஸ் அதிரடி அதிமுக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் உள்பட 3 பேர் நீக்கம்: ஒபிஎஸ் -ஈபிஎஸ் அதிரடி

இந்நிலையில் கேரளாவில், வரும் 4 -ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி என்பதால், அன்றே ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக இருப்பதாக கேரள காங்கிரஸ் பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர். ஏப்ரல் 3ம் தேதி கோழிக்கோடு விமான நிலையம் வரும் ராகுல் காந்தி, 4ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்கிறார்.

இதனால் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்க வயநாடு உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே ராகுலின் கேரள வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான பணிகளை சிறப்பு பாதுகாப்பு படை இன்று முதல் செய்ய தொடங்கி உள்ளது.

English summary
Congress leader Rahul Gandhi file his nomination papers for the Wayanad Lok Sabha seat on April 4
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X