டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ட்விட்டரில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியாக உயர்வு.! நன்றி தெரிவித்த ராகுல் காந்தி

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் பின்தொடுபவர்களின் எண்ணிக்கை இன்று 1 கோடியை தாண்டியுள்ளது. இதற்கு தன்னை பின்தொடருபவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாக ராகுல் கூறியுள்ளார்.

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் முந்தைய தேர்தலை போலவே பலத்த அடிவாங்கிய காங்கிரஸ் கட்சியால், ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு என இரு தொகுதிகளில் போட்டியிட்டார் ராகுல்.

Rahul Gandhi gets 1 crore followers on Twitter and say Thanks

இதில் வயநாடு தொகுதியில் அபார வெற்றி பெற்ற ராகுல், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியுடம் தோல்வியுற்றார். மக்களவை தேர்தலுக்கு பின்னர் இன்று முதல்முறையாக அமேதிக்கு சென்றுள்ளார் ராகுல்.

ராகுல் காந்தியை ட்விட்டர் பக்கத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடி, அதாவது 10 மில்லியனைத் தாண்டினாலும் கூட, அது பிரதமர் மோடியின் 48.5 மில்லியன் பின்தொடர்பவர்களுக்கு அருகில் கூட இல்லை.

அகில இந்தியளவில் அரசியல்வாதிகளில் மோடியை தான் ட்விட்டரில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பின்தொடருகின்றனர். அரசியல்வாதி மற்றும் அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்பிற்குப் பிறகு, உலகிலேயே ட்விட்டரில் அதிகம் பின்பற்றப்பட்டு வரும் இரண்டாவது அரசியல்வாதியாக பிரதமா் மோடி உள்ளார்.

இதில் ட்விட்டரில் 15.1 மில்லியனை தாண்டிய ஃபாலோயர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெற்று இரண்டாவது இடத்தையும், அருண் ஜெட்லி 15.1 மில்லியன் பின்தொடர்பவர்களையும், அமித் ஷா 14.2 மில்லியன் பின்தொடர்பவர்களையும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஃபாலோயர்களின்எண்ணிக்கை 1 கோடியாக உயர்ந்ததை ட்விட்டரில் அறிவித்த ராகுல், இதற்காக ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்த கொள்வதாக கூறினார். மேலும் இந்த மைல்கல் எட்டிய தருணத்தை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அமேதியில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

English summary
The number of followers of Congress leader Rahul Gandhi on popular social network Twitter has crossed 1 crore mark today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X