டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்

Google Oneindia Tamil News

டெல்லி: பன்மொழி இந்தியாவின் பலவீனம் அல்ல என்று, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பொதுமொழி இருக்கவேண்டும். அதற்கான தகுதி இந்தி மொழிக்கு உண்டு என்று இந்தி தினத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

Rahul Gandhi gives reply to Hindi row

இதற்கு பல்வேறு மாநில எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக சார்பில் செப்டம்பர் 20ம் தேதி மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பன்மொழி இந்தியாவின் பலவீனம் அல்ல என்று, ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுவரை அமித் ஷா கருத்துக்கு பதில் சொல்லாமல் இருந்த ராகுல் காந்தி முதல் முறையாக இவ்வாறு கூறியுள்ளார்.

ஓரியா, மராத்தி, கன்னடம், இந்தி, தமிழ், ஆங்கிலம், குஜராத்தி, பெங்காலி, உருது, பஞ்சாபி, கொங்கனி, மலையாளம், தெலுங்கு, அஸ்ஸாமி, போடோ, டோக்ரி, மைதிலி, நேபாளி, சமஸ்கிருதம், காஷ்மீரி, சிந்தி, சாந்தாலி, மணிபுரி இப்படி, இந்தியாவில் பல மொழிகள், ஆனால் அது அவளின் பலவீனம் அல்ல. இவ்வாறு ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

இந்தி பேசும் மாநில மக்கள் கோபத்தை சம்பாதித்துவிட கூடாது என்ற கவனத்தோடு இந்த ட்வீட் செய்யப்பட்டிருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

English summary
Former Congress president Rahul Gandhi on Monday posted various languages of India, including Nepali, with a tricolour im Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X