டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒன்னா கை கோர்ப்போம்.. வாங்க ஒரு கை பார்ப்போம்.. தமிழக வருகை குறித்து ராகுலின் வீடியோ!.. செம!

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும் மோடி அரசின் தாக்குதல்களை ஒன்றிணைந்து தடுப்போம் என தமிழகத்துக்கு மீண்டும் வருகை தரும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    #BREAKING கோவையில் ராகுல் காந்தி..!

    தமிழகத்தில் வரும் மே மாதம் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் என தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கிவிட்டார்கள்.

    50 டூ 60.. 10 அல்லது 12 நிச்சயம்.. இதுதான் ஒரே வழி.. என்ன சொல்றீங்க.. அதிரடிக்கு தயாராகும் ராமதாஸ்! 50 டூ 60.. 10 அல்லது 12 நிச்சயம்.. இதுதான் ஒரே வழி.. என்ன சொல்றீங்க.. அதிரடிக்கு தயாராகும் ராமதாஸ்!

    இவ்வாறு தமிழக தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். ராகுலின் தமிழ் வணக்கம் இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

    ஈரோடு

    ஈரோடு

    இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ராகுல் பரப்புரை மேற்கொள்கிறார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், கொங்கு மண்டலத்தில் எனது தமிழ் சகோதர, சகோதரிகளுடன் நேரத்தை செலவிட இன்று தமிழகத்திற்கு மீண்டும் வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

    கலாச்சாரம்

    கலாச்சாரம்

    தமிழர்களின் தனித்துவமான கலாச்சாரத்திற்கு எதிராக மோடி அரசு நிகழ்த்தும் தாக்குதல்களை ஒன்று சேர்ந்து தடுத்து பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். ராகுலின் தமிழ் வணக்கம் என்ற தலைப்பில் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

    ஒரு கை பார்ப்போம்

    நம்ம ராகுலுடன் ஒன்னா கை கோர்ப்போம் வாங்க, ஒரு கை பார்ப்போம் என்ற வாசகங்கள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இன்று திருப்பூருக்கு வருகை தரும் அவர் கொங்கு மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதனால் திருப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டு

    பொங்கல் பண்டிகை அன்று தமிழகத்திற்கு வந்த அவர் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட்டார். அப்போது ஏழை எளிய மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். ஒருவரின் இலை காலியாக இருந்ததை சுட்டிக் காட்டிய ராகுல் அவருக்கு மேலும் பரிமாறுமாறு கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

    English summary
    Congress MP Rahul Gandhi in his video says that he is delighted to be back in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X