டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுதர்சன நாச்சியப்பனுக்கு சீட் கிடைக்காததற்கு ப.சிதம்பரம்தான் காரணம்.. மறைமுகமாக சொன்ன ராகுல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok sabha results | இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தருவது முதல் பணி: கார்த்தி சிதம்பரம்

    டெல்லி: சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ராகுலின் வெறுப்போடுதான் அறிவிக்கப்பட்டார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் 9 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அவை ஆரணி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, தேனி, திருச்சி, திருவள்ளூர், விருதுநகர், சிவகங்கை ஆகிய தொகுதிகளாகும்.

    இதில் சிவகங்கை தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டனர். இதனால் சிவகங்கை தொகுதிக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

    ஞான் இப்போ பாட்டு பாடும்.. நீங்க எனக்கு ஓட்டுப் போடணும்.. கில்லி மாதிரி ஜெயித்த ரம்யா! ஞான் இப்போ பாட்டு பாடும்.. நீங்க எனக்கு ஓட்டுப் போடணும்.. கில்லி மாதிரி ஜெயித்த ரம்யா!

    கேள்வி

    கேள்வி

    சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து யாரை நிறுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தென் தமிழகத்தில் ராகுல் போட்டியிட தொண்டர்கள் விரும்புவதால் ராகுலுக்காக இந்த இடம் வைக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்தது.

    தோல்வி

    தோல்வி

    இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுக்கப்பட்ட நிலையில் சுதர்சன நாச்சியப்பனும் விருப்ப மனு கொடுத்திருந்தார். இந்த இருவரில் கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல்- மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு நிலுவையில் இருந்ததால் அவரை வேட்பாளராக அறிவித்தால் காங்கிரஸ் கட்சி தோல்வியுறும் என காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பகீர் தகவல்

    பகீர் தகவல்

    ஆனால் அந்த எதிர்ப்புகளையும் மீறி வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டார். இதனால் சுதர்சன நாச்சியப்பன் அதிருப்தி அடைந்து கட்சிக்கு எதிராக ஒரு கருத்தை கூறியிருந்தார். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சுதர்சன நாச்சியப்பனை தேர்வு செய்யாமல் கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து ராகுல் நேற்று முன் தினம் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டியில் பகீர் தகவலை வெளியிட்டார்.

    சொல்லாமல் சொல்லிய ராகுல்

    சொல்லாமல் சொல்லிய ராகுல்

    காங்கிரஸ் தோல்விக்கு கீழ் மட்ட தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து ராகுல் பேசியபோது ப. சிதம்பரம் தனது மகனுக்கு சீட் கேட்டு தொல்லை கொடுத்தார். நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதனால் கொடுத்துவிட்டோம். இப்படி இருந்தால் கட்சியை எப்படி நடத்துவது என்று ராகுல் கேள்வி எழுப்பினார். எனவே சுதர்சன நாச்சியப்பனுக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் இதுதான் என்பதை ராகுல் சொல்லாமல் சொல்லிவிட்டார்.

    English summary
    Congress President Rahul Gandhi indirectly says why he gave ticket for Karti Chidambaram in Sivagangai LS constituency?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X