டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுல் அமேதியில் வெல்வது கஷ்டமாம்... இந்த முறை வயநாடு எம்பியாகவே வாய்ப்பு?

Google Oneindia Tamil News

Recommended Video

    Rahul amethi exit poll | ராகுலுக்கு அமேதியில் சிக்கல் ! வயநாடு எம்பியாகவே வாய்ப்பு?

    டெல்லி: அமேதி தொகுதியில் இந்த முறை ராகுல் காந்தி கடும் போட்டியை பாஜகவிடம் இருந்து சந்தித்துள்ளதாகவும், இதனால் அவர் அமேதியைவிட வயநாடு தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளதாகவும் இந்தியா டுடே -ஆக்சிஸ் போல் கணிப்பு தெரிவித்துள்ளது.

    மக்களவை தேர்தல் கருத்துக்கணிப்புகளை கடந்த மே 19ம் தேதி மாலையில் இருந்து அனைத்து தேசிய ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன.

    இந்தியா டுடே- ஆக்சிஸ் போல் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் சோனியா காந்தி தான் போட்டியிட்டுள்ள ரேபரலி தொகுதியில் எளிதாக வென்றுவிடுவாராம்.

    நம்பாதீங்க.. எக்ஸிட் போல் நோக்கமே வேற.. தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி அதிரடி ஆடியோ மெசேஜ் நம்பாதீங்க.. எக்ஸிட் போல் நோக்கமே வேற.. தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி அதிரடி ஆடியோ மெசேஜ்

    இந்தியா டுடே கணிப்பு

    இந்தியா டுடே கணிப்பு

    ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2004ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வெற்றி பெற்று வரும் அமேதி தொகுதியில் இந்த முறை வெற்றி பெறுவது கடினம் என்கிறது இந்தியா டுடே- ஆக்சிஸ் போல் கணிப்பு.

    பிரபலமான பாஜக

    பிரபலமான பாஜக

    அமேதி தொகுதியில இந்த முறை காங்கிரஸை போல் பாஜகவும் நன்றாக பிரபலமான கட்சியாக இருப்பதாக கூறும் இந்தியா டுடே, இந்த முறை காங்கிரஸ் கட்சி அமேதியில் கடும் சவாலை சந்தித்து உள்ளதாவும் கூறியுள்ளது.

    வெற்றி வித்தியாசம்

    வெற்றி வித்தியாசம்

    மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் போட்டியை கொடுத்துள்ளாராம். கடந்த 2014ம் ஆண்டு ராகுலை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இராணி கடந்த முறை ராகுலின் வெற்றி வித்தியாசத்தை குறைத்துள்ளார்.

    அமேதியில் வெல்வாரா?

    அமேதியில் வெல்வாரா?

    இந்நிலையில் இந்த முறை அமேதியில் காங்கிரஸ் வென்றாலும் வெற்றி விகிதம் 3 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்க வாய்ப்பு உள்ளதாம். அதே நேரம் ஒருவேளை ராகுல் காந்தி அமேதியில் தோற்றாலும், கேரளாவின் வயநாடு தொகுதியில் வெல்வது உறுதி என்கிறது இந்தியா டுடே கணிப்பு. ஏனெனில் அமேதியை விட வயநாடு தொகுதி ராகுல் காந்திக்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

    English summary
    Wayanad appears to be safer seat than Amethi for Rahul Gandhi say India Today-Axis My India exit poll
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X