டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புலம் பெயர் தொழிலாளர்கள் மாண்டு போனதை உலகமே பார்த்துச்சே...மோடி அரசுக்கு தெரியாதா? ராகுல் சுளீர்

Google Oneindia Tamil News

டெல்லி: புலம் பெயர் தொழிலாளர்கள் நடுவீதிகளில் மாண்டு போனதை இந்த ஒட்டுமொத்த உலகமே பார்த்த போது மோடி அரசுக்கு மட்டும் எதுவுமே தெரியாதா? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

லோக்சபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அரசு, லாக்டவுன் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் இறந்தார்கள் என்கிற தகவல்கள் இல்லை. அதனால் இறந்துபோனவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்ட விவரமும் அரசிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

Rahul Gandhi on Centres reply over deaths of migrant workers

மத்திய அரசின் இந்த பதில் கடும் சர்ச்சையாகி உள்ளது. புலம் பெயர் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவு நடந்து போனது, ரயில்கள் மோதி இறந்து போனது என பல சம்பவங்கள் நிகழ்ந்தும் மத்திய அரசு கைவிரித்தது கடும் அதிருப்தியை உருவாக்கியது.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மோடி அரசுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் இறந்ததும் தெரியாது? கொரோனா லாக்டவுனால் எத்தனை பேர் வேலையை பறிகொடுத்தனர் என்பதும் தெரியாது.

இந்திய எல்லைகளை இணைத்து வரைபடம்..நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல்..இந்தியா கடும் கண்டனம்இந்திய எல்லைகளை இணைத்து வரைபடம்..நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல்..இந்தியா கடும் கண்டனம்

இறந்தது எத்தனை பேர் என நீங்கள் எண்ணாமல் விட்டுவிட்டால் யாருமே இறக்கவில்லை என அர்த்தமா? இத்தனை மரணங்களும் அரசாங்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லையே.. ஒட்டுமொத்த உலகமே புலம்பெயர் தொழிலாளர்கள் மாண்டு போனதை பார்த்தது.. மோடி அரசுக்கு மட்டும் தெரியாதாம்.. இவ்வாறு ராகுல் காந்தி சாடியுள்ளார்.

English summary
Rahul Gandhi attacks Centre over deaths of migrant workers during Corona Lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X