டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விவசாயிகள் போராட்டம்.. காங்கிரஸ் நிறுவன நாள் விழா.. கவலையில்லை.. இத்தாலிக்கு பறந்தார் ராகுல் காந்தி

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. எனவே, கட்சியின் 136வது நிறுவன நாளில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார்.

நாட்டின் பழமையான கட்சி என்ற பெருமை கொண்டது காங்கிரஸ் கட்சி. அக்கட்சி சுதந்திர போராட்ட காலத்திலே துவங்கப்பட்டு, சுதந்திர போராட்டங்களில் பங்கேற்றது.

காங்கிரஸ் கட்சியின் 136வது நிறுவன நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ராகுல் காந்தி நேற்று வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே.. மறுக்கும் பவார்.. மீண்டும் ராகுலையே விரும்பும் காங்!பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே.. மறுக்கும் பவார்.. மீண்டும் ராகுலையே விரும்பும் காங்!

தனிப்பட்ட காரணமாம்

தனிப்பட்ட காரணமாம்

காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இதுபற்றி கூறுகையில், தனிப்பட்ட காரணங்களுக்காக ராகுல் காந்தி வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளார். சில நாட்களுக்கு வெளிநாட்டில் இருப்பார். இவ்வாறு சுர்ஜேவாலா கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இத்தாலி சென்றார்

இத்தாலி சென்றார்

பிடிஐ செய்தியில், ராகுல் காந்தி, கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலமாக, இத்தாலியின் மிலன் நகருக்குச் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் பாட்டி இத்தாலியில் இருக்கிறார். எனவே அவ்வப்போது ராகுல் அங்கு சென்று வருவது வாடிக்கையாக இருக்கிறது.

காங்கிரஸ் நிலைப்பாடு

காங்கிரஸ் நிலைப்பாடு

அதேநேரம், இந்தியாவில் விவசாயிகள் போராட்டம், இத்தாலியில் கடுமையான கொரோனா பரவல், காங்கிரஸ் கட்சி நிறுவன நாள் விழா ஆகிய முக்கிய விவகாரங்களுக்கு இடையேயும், ராகுல் காந்தி ஏன் இத்தாலிக்கு சென்றார் என்பது புரியவில்லை. அதேநேரம் அவர் எந்த நாடு சென்றார் என்பதை காங்கிரஸ் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

ராகுல் காந்திதான் எதிர்க்கட்சி தலைவர்கள் அழைத்துக் கொண்டு குடியரசு தலைவரிடம் சென்று விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மனு கொடுத்தார். ஆனால் விவசாயிகள் போராட்டம் பெரிதாகிக் கொண்டிருக்கும் நிலையில், வழிநடத்த வேண்டிய ராகுல் காந்தி வெளிநாடு போய்விட்டார்.

சிவசேனா அதிருப்தி

சிவசேனா அதிருப்தி

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தும் சிவசேனாவும், ராகுலின் செயல்பாடுகளால் கோபமடைந்துள்ளது. கட்சியின் சாம்னா நாளிதழில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படாமல் இருப்பதாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி ஆப்சென்ட்

ராகுல் காந்தி ஆப்சென்ட்

கடந்த செப்டம்பர் மாதம், நாடாளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ராகுல் காந்தி திடீரென ஆப்சென்ட் ஆகிவிட்டார். அவர் வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. கேரளாவின் வயநாடு தொகுதியில் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வென்று சாதித்தவர். ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்து வெளிநாடு போனது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

English summary
Congress leader Rahul Gandhi is on a personal visit abroad and will be absent for the 136th foundation day of the party on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X