டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய தொழிலுக்கு 3 வருடங்கள் எந்த அனுமதியும் தேவையில்லை.. ராகுல் காந்தியின் அடுத்த அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், தொழில் துறை வளர்ச்சிக்கு சில முக்கிய நடவடிக்கைகளை எடுப்போம் என்று அந்த கட்சியின் தேசிய தலைவரான ராகுல் காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ளவர்கள் குடும்பங்களுக்கு மாதம் தலா ரூ.6000 வழங்கப்படும் என்ற ஒரு திட்டத்தை ராகுல் காந்தி சமீபத்தில் அறிவித்தார்.

Rahul Gandhi plans for start up business

இந்த நிலையில், தொழில்துறை வளர்ச்சிக்கு ராகுல் காந்தி புது அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

தடைகள், கால தாமதங்கள் அனைத்தையும் தவிர்த்து, புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அரசிடம் இருந்து எந்த ஒரு அனுமதியும் பெறாமல் தொழில் நடத்த அனுமதிக்கப்படும். புதிய தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் ஏஞ்சல் வரி ரத்து செய்யப்பட்டு, வங்கியில் கடன் கிடைப்பது எளிதாக்கப்படும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

வண்டியை நிப்பாட்டு.. ஆன் தி வேயில் மாணவர்களிடம் ஓட்டுக் கேட்ட மு.க.ஸ்டாலின்வண்டியை நிப்பாட்டு.. ஆன் தி வேயில் மாணவர்களிடம் ஓட்டுக் கேட்ட மு.க.ஸ்டாலின்

மேலும் ராகுல் காந்தி அளித்த பேட்டியொன்றில், காங்கிரஸ் ஆட்சியில், வேலைவாய்ப்பு உருவாக்க மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படும். புதிதாகத் தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு நிதியுதவி, வங்கியில் எளிதாகக் கடன் வசதி, வரிச்சலுகை கொடுக்கப்படும்.

புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கும்போது, அரசிடம் இருந்து எந்தவிதமான அனுமதிக்கும் காத்திருக்க வேண்டாம் என்ற நிலையை கொண்டு வருவோம். எதைப்பற்றியும் தொழில் தொடங்குவோர் கவலைப்பட தேவை இருக்காது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

English summary
Want to start a new business? Want to create jobs for India? Here’s our plan for you, says Congress chief Rahul Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X