டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்தனர் ராகுல், பிரியங்கா காந்தி

Google Oneindia Tamil News

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சந்தித்தனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 3 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ப. சிதம்பரம். ஐ.என்.எக்.ஸ் விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது.

Rahul Gandhi, Priyanka Gandhi meet P Chidambaram at Tihar Jail

ஆனால் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான அமலாக்கப் பிரிவு வழக்கில் சிதம்பரத்தின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார்.

முதல்வராக்கும் உத்தவ் தாக்கரே 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாக வேண்டும்முதல்வராக்கும் உத்தவ் தாக்கரே 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாக வேண்டும்

இம்மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இந்த நிலையில் டெல்லி திகார் சிறையில் ப. சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று காலை சந்தித்தனர்.

ப. சிதம்பரத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஏற்கனவே சந்தித்துள்ளனர்.

English summary
Congress leaders Rahul Gandhi and Priyanka Gandhi met Former Union Minister P Chidambaram at Tihar Jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X