டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்சிகள் கவிழ்ப்பு...மெழுகுவர்த்தி ஏந்தியது...இவைதான் மோடி சாதனைகள்...ராகுல் காந்தி!!

Google Oneindia Tamil News

டெல்லி: தொடர்ந்து மத்தியில் பிரதமர் மோடி ஆட்சியை விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்றும் விமர்சித்துள்ளார். மத்தியப்பிரதேச, ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சிகளை கவிழ்ப்பதைத்தான் மோடி அரசு சாதனையாக கொரோனா பொது முடக்கத்திலும் செய்து கொண்டிருந்தது என்று சாடியுள்ளார்.

இன்று தனது ட்விட்டர் பதிவில் பல்வேறு கேள்விகளை ராகுல் காந்தி எழுப்பியுள்ளார். தனது பதிவில், ''கொரோனா பொது முடக்கத்தில் மோடி அரசின் சாதனைகள் இவைதான்: பிப்ரவரியில் ஹலோ ட்ரம்ப் நிகழ்ச்சி, மார்ச் - மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு, ஏப்ரல் மாதம் - மெழுகுவர்த்தி ஏற்றியது, மே - அரசின் ஆறாவது ஆண்டு விழா கொண்டாட்டம், ஜூன் - பீகாரில் காணொளி மூலம் பேரணி, ஜூலை - ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி கவிழ்ப்பு.

Rahul Gandhi questions modi governments priorities during amid coronavirus pandemic

தொடர்ந்து இதுபோன்ற சாதனைகளைத்தான் மோடி அரசு செய்து வருகிறது. இதனால்தான் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது'' என்று மோடி அரசை கிண்டல் செய்துள்ளார்.

சச்சின் பைலட் உள்ளிட்டோர் வழக்கில் ராஜஸ்தான் ஹைகோர்ட் 2 மணிக்கு தீர்ப்புசச்சின் பைலட் உள்ளிட்டோர் வழக்கில் ராஜஸ்தான் ஹைகோர்ட் 2 மணிக்கு தீர்ப்பு

இதற்கு முன்னதாக மோடி அரசின் ஜிடிபி தோல்வி, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் போதிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தது, எல்லையில் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்தது என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

Rahul Gandhi questions modi governments priorities during amid coronavirus pandemic

தனது இரண்டாவது வீடியோவில், ''சீனர்கள் நமது இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் ஒரு வரை படத்தை தங்களுக்குள் தீர்மானித்துக் கொள்கின்றனர். அதற்குத் தகுந்தவாறு உலக வரை படத்தை நிர்ணயிக்கின்றனர். எல்லை ராஜ தந்திரத்தில், கல்வான், டெம்சோக், பாங்காங் எதுவாக இருக்கட்டும், இந்த இடங்களில் தங்களது நிலைப்பாட்டை நிலை நிறுத்திக் கொள்ள திட்டமிடுகின்றனர். இதையே தான் பாகிஸ்தானுடன் இணைந்து செய்கின்றனர். இதை வெறும் எல்லை பிரச்சனையாக எடுத்துக் கொள்ள முடியாது. பிரதமரின் மீது அழுத்தம் கொடுக்கவே சீனா இதை செய்கிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

English summary
Rahul Gandhi questions modi governments priorities during amid coronavirus pandemic
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X