டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரபேல் விவகாரம்.. ஒரு வேகத்தில் அப்படி பேசிவிட்டேன்.. உச்சநீதிமன்றத்தில் ராகுல் வருத்தம்

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு வேகத்தில் ரபேல் குறித்து பேசிவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெரிவிக்காத கருத்தை தெரிவித்ததாக கூறியதற்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரபேல் விமான பேரத்தில் ஊழல் நடந்திருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மீண்டும் ரபேல் வழக்கை விசாரிக்கப் போவதாக அண்மையில் அறிவித்தது.

மக்களவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பால் காங்கிரஸ் கட்சியினர் ரபேல் விவகாரத்தில் பாஜகவை திட்டி தீர்த்தனர்.

மோடிக்கு ஓட்டு போடுங்கள் என ரஜினி சொல்லவேயில்லையே.. சத்யநாராயணராவ் திடீர் பேட்டிமோடிக்கு ஓட்டு போடுங்கள் என ரஜினி சொல்லவேயில்லையே.. சத்யநாராயணராவ் திடீர் பேட்டி

ராகுல் விமர்சனம்

ராகுல் விமர்சனம்

குறிப்பாக ரபேல் விமான ஒப்பந்தத்தில் தொடர்புபடுத்தி பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக விமர்சித்து பேசினார். அதோடு பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடர் என்று கூறி விட்டது. உச்ச நீதிமன்றமே பிரதமரை திருடர் என்று தெரிவித்து இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

உச்சநீதிமன்றத்தில் முறையீடு

உச்சநீதிமன்றத்தில் முறையீடு

இதையடுத்து பாரதிய ஜனதா கட்சி உச்சநீதிமன்றத்தில் இதற்கு எதிராக முறையிட்டது. வழக்கு நிலுவையில் இருக்கும் போது ரபேல் விமான ஒப்பந்தத்தில் மோடியை உச்ச நீதிமன்றம் திருடர் என்று கூறிவிட்டதாக ராகுல் காந்தி கூறுவதை கண்டிக்க வேண்டும் என கூறியது. ராகுல் பொய் சொல்கிறார் என்று பாஜக வழக்கு தொடுத்தது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சி உச்சநீதிமன்றத்தில் இதற்கு எதிராக முறையிட்டது. வழக்கு நிலுவையில் இருக்கும் போது ரபேல் விமான ஒப்பந்தத்தில் மோடியை உச்ச நீதிமன்றம் திருடர் என்று கூறிவிட்டதாக ராகுல் காந்தி கூறுவதை கண்டிக்க வேண்டும் என கூறியது. ராகுல் பொய் சொல்கிறார் என்று பாஜக வழக்கு தொடுத்தது.

உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இதையடுத்து உச்சநீதிமன்றம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு இன்று உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

வருத்தம்

வருத்தம்

அந்த விளக்கத்தில் ராகுல் காந்தி, தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு வேகத்தில் ரபேல் விவகாரம் குறித்து அவ்வாறு பேசிவிட்டேன். உச்ச நீதிமன்றம் சொல்லாத விஷயத்தை சொல்லியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது.

என்ன பிரச்சாரம்

என்ன பிரச்சாரம்

பாஜகவினர் ரபேல் வழக்கில் தீர்ப்பு வந்ததில் இருந்தே அதை பற்றி பிரச்சாரம் செய்து வந்தனர். அதனால் நான் அப்படி கூறிவிட்டேன். ஆனால் கோர்ட் எப்போதும் யாரையும் திருடர் என்று வெளிப்படையாக கூறியது கிடையாது. நான் பேசியது பிரச்சார கொதிப்பில் பதிவான வார்த்தை என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

சொன்னது என்ன

சொன்னது என்ன

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, நான் இப்போதும் என் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறேன். மோடி திருடர்தான். நீதிமன்றம்தான் அவரை திருடர் என்று கூறவில்லை. ஆனால் நான் சொல்கிறேன், அவர் திருடர்தான். அது விரைவில் நிரூபணம் ஆகும், என்றுள்ளார்.

English summary
Rahul Gandhi today regrets to the Supreme Court for his comments on its order on the Rafale fighter jet deal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X