டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிராக்டரில் சோபாவுக்கே விமர்சனமா?.. அப்ப ஏர் இந்தியா ஒன் விமானத்தில் சோபாவே இல்லையா?.. ராகுல்காந்தி

Google Oneindia Tamil News

டெல்லி: நான் டிராக்டரில் சோபாவில் அமர்ந்ததை விமர்சிப்பதா என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் டிராக்டர் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த பேரணியில் டிராக்டரில் சோபாவை போட்டுக் கொண்டு ராகுல் காந்தி அமர்ந்திருந்தார்.

இதை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்திருந்தார். ஸ்மிருதி இரானி கூறுகையில் டிராக்டரில் சோபா போட்டுக் கொண்டு அமர்ந்ததன் மூலம் ராகுல் காந்தி, விஐபி விவசாயியாவார் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

தன் இமேஜை காப்பாற்ற... சீனாவுக்கு நிலத்தை விட்டுக் கொடுத்த பிரதமர்...ராகுல் காந்தி காட்டம்!! தன் இமேஜை காப்பாற்ற... சீனாவுக்கு நிலத்தை விட்டுக் கொடுத்த பிரதமர்...ராகுல் காந்தி காட்டம்!!

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

ராகுல் காந்தி போன்ற விஐபி விவசாயிகளால் இடைத்தரகர்களின் பிடியில் இருந்து சிறு குறு விவசாயிகளை விடுவிக்கும் சட்டத்தை ஆதரிக்க முடியாது. மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கனவு ஒரு போதும் நிறைவேறாது என விமர்சனம் செய்திருந்தார்.

டிராக்டரில்

டிராக்டரில்

இதற்கு ராகுல் காந்தி நேற்றைய தினம் பதிலடி கொடுத்துள்ளார். என் நலம் விரும்பிகளில் யாரோ ஒருவர் டிராக்டரில் சோபாவை போட்டுள்ளார். ஆனால் பிரதமர் மோடியின் பயன்பாட்டுக்காக மக்கள் வரிப்பணத்தில் ரூ 8000 கோடிக்கு புதிய ஏர் இந்தியா ஒன் விமானம் வாங்கப்பட்டுள்ளது.

சோபா

சோபா

அதில் சோபாவே இல்லையா, சோபா மட்டுமின்றி, பிரதமரின் வசதிக்காக சொகுசு படுக்கைகளே உள்ளன. மொத்தம் 50 படுக்கைகள் உள்ளன. பிரதமர் மோடியின் நண்பர் டொனால்ட் டிரம்ப் ரூ 8000 கோடியில் விமானத்தை பயன்படுத்தினால் பிரதமர் மோடியும் அதையே பயன்படுத்த விரும்புகிறார்.

வீண்

வீண்

பிரதமரின் சொகுசு விமானம் குறித்து யாரும் பார்ப்பதும் இல்லை, கேள்வி கேட்பதும் இல்லை. விமர்சிப்பதும் இல்லை. டிரம்ப் வைத்திருக்கும் ஒரே காரணத்தால் ரூ 8000 கோடி மக்கள் வரிப்பணத்தை பிரதமர் மோடி வீணடித்து விட்டார் என ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.

English summary
Congress EX President Rahul Gandhi replies for Smriti Irani for her Sofa on Tractor comment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X