டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அலர்ட்டா இருங்க.. போலி எக்சிட் போலை நம்பாதீர்.. ராகுல் காந்தி திடீர் மெசேஜ்

Google Oneindia Tamil News

டெல்லி: எக்சிட் போலை நம்பாதீர்கள். எப்போதும் விழிப்போடு இருங்கள் என தொண்டர்களுக்கு ராகுல்காந்தி அறிவுரை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சியினரின் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வந்த நாளன்றே தில்லாக தைரியமாக கூலாக பேட்டி கொடுத்தார் மம்தா பானர்ஜி. அதில் அவர் கூறுகையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மூலம் மக்கள் மனதில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்ற ஒரு மாயையை ஏற்படுத்துகின்றனர்.

அம்பானி முதல் சிபிஐ வரை.. 24 மணி நேரத்தில் நிகழ்ந்த 6 பரபரப்பு மாற்றங்கள்.. என்ன நடக்கிறது? அம்பானி முதல் சிபிஐ வரை.. 24 மணி நேரத்தில் நிகழ்ந்த 6 பரபரப்பு மாற்றங்கள்.. என்ன நடக்கிறது?

சுதாரிப்பு

சுதாரிப்பு

இவ்வாறு ஏற்படுத்திவிட்டு ஈவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடத்துவதே பாஜகவின் திட்டம் என்று கூறியிருந்தார். இதையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சுதாரித்து கொண்டு தொண்டர்களுக்கு மெசேஜ் அனுப்பினர்.

விழிப்பு

விழிப்பு

இந்த நிலையில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இன்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி ஒரு கருத்தை கூறியுள்ளார். அப்போது அவர் கூறுகையில் அடுத்த 24 மணி நேரம் நமக்கு முக்கியமானவை. அந்த நேரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

போராட்டம்

போராட்டம்

எதை கண்டு பயப்படாதீர்கள். நீங்கள் உண்மைக்காக போராடினீர்கள். இந்த போலியான எக்சிட் போல்களை நினைத்து மனம் தளராதீர்கள். உங்களது கடும் உழைப்பு என்றும் வீணாகாது.

மெசேஜ்

மெசேஜ்

உங்கள் மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கை வையுங்கள். ஜெய் ஹிந்த் என ஹிந்தியில் மெசேஜை ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் அனுப்பியுள்ளார்.

English summary
Rahul Gandhi tweets in Hindi not to be disheartened by what the fake exit polls are propagating. Be alert.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X