டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான்தான் அப்பவே சொன்னேனே.. இப்போ பாருங்க.. அதே மாதிரி ஆகிப்போச்சு.. ராகுல் காந்தி ட்வீட்

Google Oneindia Tamil News

டெல்லி: நான்தான் அப்பவே சொன்னேனே.. அது போலத்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.. என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 17ஆம் தேதி ராகுல்காந்தி ஹிந்தியில் ஒரு ட்வீட் வெளியிட்டிருந்தார். அதில், நாடு முழுக்க தற்போது கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 லட்சம் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதே நிலைமை நீடித்தால், ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் 20 லட்சம் என்ற அளவுக்கு இந்த எண்ணிக்கை அதிகரித்து விடும். இந்த பெருந்தொற்று நோயிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

எப்படி யோசிக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது புதிய கல்விக் கொள்கை.. பிரதமர் மோடி புகழாரம்எப்படி யோசிக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது புதிய கல்விக் கொள்கை.. பிரதமர் மோடி புகழாரம்

ரீட்வீட்

ரீட்வீட்

இந்த நிலையில்தான் இந்தியா தற்போது 20 லட்சம், கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கையைத் தாண்டி உள்ளது. அதை நினைவுபடுத்தும் விதமாக மீண்டும் பழைய ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார் ராகுல்காந்தி. கொரோனா 20 லட்சத்தை தாண்டி விட்டது. மோடி கவர்மெண்ட் மிஸ்ஸிங் என்று ஹிந்தியில் அவர் ட்வீட் செய்துள்ளார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

ராகுல் காந்தி, இன்று நேற்றல்ல, தொடர்ந்து பல வாரங்களாகவே மத்திய அரசு கொரோனா விஷயத்தில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்று குற்றம்சாட்டி, ட்வீட் வெளியிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது தனது கணிப்பு சரியாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

பிரகாஷ் ஜவடேக்கர்

பிரகாஷ் ஜவடேக்கர்

ஆனால், மத்திய அரசு, ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த மாதம் அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சி ட்விட்டர் கட்சியாக மாறிவிட்டது. ராகுல்காந்தி தினமும் ட்வீட் செய்து வருகிறார்.

கருத்து

கருத்து

மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்கு அவர்களுக்கு எந்த வேலையும் கிடையாது. வெறுப்படைந்து போய் இருக்கிறது காங்கிரஸ் கட்சி, என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மீண்டும் ராகுல் காந்தி தனது கருத்து சரிதான் என்பது போல ட்வீட் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Congress leader Rahul Gandhi, says he was predicted correctly on coronavirus impact in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X