டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்னும் கூட டைம் இருக்கு மோடிஜி..முதலாளிகளை விட்டு,விவசாயிகள் பக்கம் வாங்க..ராகுல் காந்தி டுவிட்!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி, முதலாளிகளை விட்டு விட்டு, உணவளிக்கும் விவசாயிகளை ஆதரிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்களை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது

Rahul Gandhi says PM Modi to support farmers

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 45-வது நாளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எந்த பேச்சுவார்த்தையிலும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை அட்டூழியம்- ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைதுகச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை அட்டூழியம்- ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது

இந்த விவசாயிகளுக்கு, இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. வெளிநாட்டில் இருந்தும் ஆதரவு குரல் எழுந்து வருகிறது. வேளாண் சட்டங்களை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் மத்திய அரசை கண்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக மீண்டும் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ''இன்னும்கூட நேரம் இருக்கிறது மோடி ஜி. உணவளிக்கும் விவசாயிகளை ஆதரியுங்கள். முதலாளிகளை விட்டு விலகுங்கள்'' என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவுடன் 2018-ம் ஆண்டு மக்களவையில் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து தான் பேசிய வீடியோவை ராகுல் காந்தி இணைத்துள்ளார்.

English summary
The Congress MP Rahul Gandhi has said that Prime Minister Modi should leave the bosses and support the feeding farmers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X